-
கிருஷ்ணப் பருந்து
கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள் இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். வெறும் புறத்தை மட்டுமின்றி, இந்தச் சங்கமத்தின் ஆழங்களைச் சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.
– தி. ஜானகிராமன்
Out of stock
-
ஆ.மாதவன் கதைகள்
ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்…
அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேசி போல தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை
Out of stock