• சுல்தானின் பீரங்கி

    நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலாதியானது. கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘சுல்தானின் பீரங்கி’ அவரது இரண்டாவது உலகச் சிறுகதைகள் தொகுப்பாகும். மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பின் கதைகள் யுத்தம், புலம்பெயர்வு, விளிம்புநிலை வாழ்வு, இருத்தலின் குரூர அபத்தம் போன்றவற்றை மையப்படுத்தியவை. மிகச் சவாலான இலக்கிய வடிவமான சிறுகதை, வரையறுக்கப்பட்ட வெளிக்குள் சிறுகதை ஆசிரியன் நிகழ்த்தும் ஒரு புனைவுச் சாகசம் என்ற எண்ணம் இக்கதைகளின் தொனி, வடிவம், கூறுமுறை இவற்றை வாசித்தறிகையில் உறுதிப்படுகிறது. சமரசமற்றதொரு கறார்த்தன்மையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் மூலப்பிரதிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அதேவேளை சரளமான வாசிப்புக்கு ஊறு தராதவை. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு வளமூட்டக்கூடிய தொகுப்பு இது. – அசதா

    RM15.00
  • எருது

    விகடன் விருது பெற்ற உலக சிறுகதைகள் நூல்

    RM15.00
  • காஃப்கா – கடற்கரையில்

    தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.
    முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.

    இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.

    RM90.00