• சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

    சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி,கருத்தில் தெளிவு கூடுகிறது. சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்றபழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல், பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம்’என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. – பழ. அதியமான்

    RM13.00
  • கரையும் தார்மீக எல்லைகள்

    சிறந்த படைப்பு ஏற்படுத்துகிற உளக்கிளர்ச்சி, அழகியல் / கோட்பாடு சார்ந்த ரசனையை ஏற்படுத்தி நம்மைப் பண்படுத்துகிறது. தான் அறிந்ததைப் பிறரும் அறியச்செய்கிறது. சிவானந்தத்தின் இந்தப் புத்தகம் செய்வது அதைத்தான். வாசிப்பினூடாகக் கிடைத்த அனுபவச் சேர்மானங்களைச் செரித்து, ஆளுமைகள், எழுத்தாளர்கள், தலைவர்கள், தொழில்நுட்பம், நிதிமேலாண்மை போன்ற தலைப்புகளில் உள்ளடக்கித் தந்திருக்கிறார். போலிப் பாவனைகளையும் உள்ளார்ந்த வெளிப்பாடுகளையும் பிரித்தறியும் நுண்ணுணர்வை இந்தக் கட்டுரைகள் நமக்களிக்கின்றன.

    RM15.00