-
இந்தக் கதையை சரியாக சொல்வோம்
இவர்கள் அகதிகளாகவோ அல்ல தொழில் நிமித்தமாகவோ 80 களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள். மேற்கத்திய குடிமன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரைக் கண்டடையும் தேடல் இவர்களுக்குள் இருக்கிறது.
இரண்டு கலாசாராங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகள் எழுப்புகிறது. குடிபெயர்ந்தவர்கள் தன் இருப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றிணையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசுத் தட்டின் நடுமுள் போல இரு கலாசாராங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
ஏற்கனவே, விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகிறது.அப்படியான சில புலம்பெயரிகளையும் அவர்களின் சிறுகதைகளையும் தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்