• ஆண்டனி கிளியோபாட்ரா

    ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!

    – கிளியோபாட்ரா-

    RM25.00
  • ஒதெல்லோ

    இயாகோவின் நயவஞ்சகத்தால் துண்டாடப்பட்ட ஒதெல்லோ, ஒரு சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் அந்தத் தூயவளைச் சந்தேத்து அவளைக் கொல்வதுதான் இந்த நாடகத்தின் துன்பியல் அடிப்படை. அதற்கு முன்னான அவனின் மனப்போரட்டம் அவனது துயர்ர்தைக் காட்டுகிறது. இது சிறந்த ஒதெல்லோ நாடகத்தின் மமிய உணர்வு. ஒலெதெல்லோ புதுமைதாசனால் சிறப்பாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

    RM25.00
  • மன்னன் லியர்

    ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.

    RM25.00
  • மெக்பெத்

    ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.

    RM25.00
  • ரோமியோ ஜூலியட்

    ஆயின், ஷ்…. அமைதி! அதோ! அங்கே அந்தச் சாளரத்தினூடே ஒளிர்வது ஒளியா? அது ஜூலியட் என்னும் ஞாயிற்றினது கிழக்குப்போன்றிருக்கின்றது. அழகிய ஞாயிறே, எழுவாய், எழுந்து அந்த அழுக்காறு மிக்குடைத்த வெண்திங்களைக் கொல்வாய்! நீ அந்த அதனினும் அழகுமிளிர்ந்தவளாதலின், அவள் உன்பால் அழுக்காறுற்றும் துன்புற்றும், நோயுற்றும் வெளிறியும் போயினாள்.

    RM25.00
  • ஹேம்லெட்

    ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.

    -டாக்டர் கா.செல்லப்பனார்.

    RM25.00