-
நூறு நிலங்களின் மலை
நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) – ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்.
-
குகைகளின் வழியே
குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) – ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர. இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.
RM16.00