-
விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்
RM25.00மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.
In stock
-
-
மண்டை ஓடி
RM10.00ம.நவீன் நல்ல கதை சொல்லி என்பதையும், கதையை எப்படிச்சொல்ல வேண்டும், எந்த மொழியில், எந்த அளவில், சொல்லவேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று ‘மண்டை ஓடி’ – தொகுப்பு சொல்கிறது. – இமையம்
Out of stock
-
கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்
RM20.00இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள், முதல் வாசிப்பிலேயே நாமும் இந்தப் படைப்பில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம் அல்லது இந்தக் கதைகள் முழுக்க நாம்தான் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. அடிமனதில் உறைந்துவிட்ட பழைய பாடல்கள் போல, நம்மை விடாது தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கதைகளின் கலைத்தன்மை செய்நேர்த்தியால் வந்ததன்று, உண்மையின் தரிசனத்தால் வந்தது!
– பாரதிபாலன்
Out of stock
-
இசூமியின் நறுமணம்
RM17.00இசூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.
Out of stock





