-
மண்பாரம்
இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்… ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.
இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.
-
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
தோட்டியின் மகன்
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.