-
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசு பெற்ற குறுநாவல்கள்
வா.மு.கோமு, நாராயணி கண்ணகி போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் தமது எழுத்து மூலம் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளான மணி எம்.கே மணி, சுரேஷ் பிரதீப், மயிலன் ஜி சின்னப்பன், மலர்வதி, எம்.எம்.தீன் ஆகியோர்களுடன் புதிதாக எழுத வந்திருக்கும் அ.மோகனா, பாலாஜி பிரசன்னா, பிகு என.. படைப்புலகில் அவரவர் திறனுக்குரிய வாய்ப்பை வழங்கிய போட்டியாக புதுமைப்பித்தன் நினைவுக் குறுநாவல் போட்டி-2020 நிறைவுற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. அவ்வகையில் எழுபது சதவீதம் இளம்படைப்பாளிகள் வெற்றி பெற்றிருப்பதிலிருந்து எங்கள் புது யுகத்தின் முகங்கள்’ எனும் குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது.