Showing all 5 results

  • பால்யகால சகி

    பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ – இன்னும் பெரிய ஒருவராக – ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.

    RM10.00
  • பாத்துமாவின் ஆடு

    வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமா வின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்த்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.

    RM12.50
  • மதில்கள்

    மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன். ‘மதில்கள்’ நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவிள ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    RM9.50
  • சப்தங்கள்

    வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

    RM11.50
  • எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

    ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞு பாத்தும்மாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.

    RM12.50