Showing the single result

  • மரப்பாச்சி சொன்ன ரகசியம்

    சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதிலும் அந்தப் பாதிப்பின் செல்வாக்கு ஆக்கிரமிக்கிறது. உலகத்தின் மீதான அச்சமும் சந்தேகமும் நிறைந்த ஒரு முரண் பார்வையை உண்டாக்கும் சக்தி வாய்ந்தது அந்தப் பாலபருவத்து மன முள். பிள்ளைகள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படும் இந்த மானுடப் பேரவலத்தின்மீது, இந்த உலகளாவிய தீவிர சமூகப் பிரச்சினையின்மீது, ஆழ்ந்த முறையில் கருத்துச் செலுத்துகிறது இந்த நூல்; இந்த இழிவுக்கெதிரான விழிப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறது. எதிர்காலத் தலைமுறை, எதிர்காலச் சமூகத்தின் கூட்டு ஆன்மா நோயடையாதிருக்க, இந்த நூல் இப்போது ஒரு மூலிகையாகத் தோன்றியிருக்கிறது.

    RM8.00