| Author | |
|---|---|
| Publications | க்ரியா |
அஞ்ஞாடி
RM120.00
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…
Out of stock
Related products
-
துயில்
RM47.70தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.
-
மீஸான் கற்கள்
RM35.00புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
-
உறுபசி
RM18.00நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
-
-
கடவு
RM16.00திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.
-
சாயாவனம்
RM22.50சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.
-
உப பாண்டவம்
RM34.20இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.
மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.
ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.
-
கோவேறு கழுதைகள்
RM18.90இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.









