Author | |
---|---|
Publications | ஆதிரை வெளியீடு |
ஆறாவடு
RM13.00
கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுக்கள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன. இந்திய இராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கிய போது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்கு குழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் ஓர் அமிலமாய் தெறித்தது. நீண்ட பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் – புலிகள் பேச்சுக்காலத்தின் போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள். பேச்சுவார்த்தையின் தேனிலவுக்காலம் அதீத நம்பிக்கைகளை அவர்களிடத்தில் ஊட்டியிருந்தது. ஈற்றில் அந்த அமைதியின் முடிவும் முன்னெப்போதும் இல்லாத பெரும் ஊழிக்காலக் கொரூரத்தை உருவாக்கி கழிந்து போனது. இப்படியான, 87 இல் தொடங்கி 2003 வரையான இந்த இரண்டு அமைதிக்கான காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதைகள் நகர்கின்றன.
Out of stock