Author | |
---|---|
Publications | தமிழினி |
Related products
-
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
கடவு
திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.
-
மீஸான் கற்கள்
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
-
குட்டி இளவரசன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.” -
கோபல்ல கிராமம்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
-
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
-
அஞ்ஞாடி
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…
-
வீடியோ மாரியம்மன்
ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
கூத்து வைக்காம வுட்டுப்புடாத.– நாவலிலிருந்து