Author | |
---|---|
Publications | ஆதிரை வெளியீடு |
திருமதி. பெரேரா
RM14.00
திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர் நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர்
தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம்.
Out of stock
Related products
-
கருங்காணு
மலேசியத் தமிழர்களின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை, எதிர்கொண்ட சிக்கல்களை குறுநாவல் வழி செறிவாக எழுதியுள்ளார் அ.ரெங்கசாமி
-
-
கோபல்ல கிராமம்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
-
CHILDREN OF DARKNESS
மலேசியாவின் நான்கு நவீனத் தமிழ் இலக்கியவாதிகளின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்.
-
ஸலாம் அலைக் (நாவல்)
ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
ஆசிரியர் குறிப்பு:இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.
இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்….. -
இச்சா
இச்சா(நாவல்) – ஷோபா சக்தி:
“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”
-
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.
-
பாக்ஸ்
‘கொரில்லா’, ம்’ நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.