Publications | யாவரும் |
---|---|
Author |
Related products
-
துயில்
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.
-
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
புயலிலே ஒரு தோணி
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.
நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
-
சஞ்சாரம்
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
-
தோட்டியின் மகன்
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
-
நெடுங்குருதி
குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
-
கோவேறு கழுதைகள்
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.
-
கோபல்ல கிராமம்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.