அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோல அருணாவின் எழுத்து அவர் சொல்லவந்த காட்சிகளைக் கண்முன்னே நிறுத்துகிறது. – அ. முத்துலிங்கம் இளமை நினைவுகளை எழுத முற்படும்போது, நினைவேக்கத்தின் தழுதழுப்பும் இழந்தவை பற்றிய பொருமலும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படும். அருண்மொழியின் கட்டுரைகளில் அது நடக்கவில்லை . துல்லியமான விபரங்களுடன், சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம். சமனமான, முதிர்ந்த நடை. – யுவன் சந்திரசேகர்
Categories: | TAMIL NADU BOOKS, Zero degree/எழுத்து பிரசுரம், கட்டுரை, புனைவு |
---|
Author | |
---|---|
Publications | Zero degree/எழுத்து பிரசுரம் |
Related products
-
நாளை மற்றுமொரு நாளே
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!
-
புயலிலே ஒரு தோணி
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.
நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
-
நெடுங்குருதி
குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
-
ஜே.ஜே. சில குறிப்புகள்
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
-நாவலிலிருந்து
-
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
கடலுக்கு அப்பால்
ப சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவல் வெளியாகி சுமார் அறுபதாண்டுகாலம் ஓடிவிட்டது. கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு கடல் கடந்த களத்தில் நிகந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் கடலுக்கு அப்பால் நாவலை தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரியாகவே சொல்லலாம்.
-
துயில்
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.
-
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.