Author | |
---|---|
Publications | கனவுப்பட்டறை |
Related products
-
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
-
குட்டி இளவரசன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.” -
அந்நியன்
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
-
-
18வது அட்சக்கோடு
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் பார்த்ததில்லை.
-
கடவு
திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.
-
மீஸான் கற்கள்
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
-
வீடியோ மாரியம்மன்
ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
கூத்து வைக்காம வுட்டுப்புடாத.– நாவலிலிருந்து