| Author | |
|---|---|
| Publications | manjul publication |
பிரார்த்தனை எனும் சக்தி
RM20.00
Murphy, author of The Power of Your Subconscious Mind, wrote this book to explain to readers how they could attain the source of their good and to get desired results through proper prayer. It is a manual on how to pray, how to maintain prayer as part of everyday activity, how to use prayer in case of emergency or danger, etc. According to Murphy, prayer is an ever present help in time of trouble, but you do not have to wait for trouble to make prayer an integral and constructive part of your life.
Only 1 left in stock
Related products
-
பிறகு
RM27.50பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.
-
கடவு
RM16.00திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.
-
சத்தியத்தின் ஆட்சி
RM17.50தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை.
சேவையுணர்வு என்பது ஏதோ செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுவதல்ல. கடமை என நினைத்து ஆற்றப்படும் செயலுமல்ல. படித்தல், எழுதுதல் போல ஒருவருடைய குணமாகவே அது அமையவேண்டும். அப்போதுதான் சேவையாற்றுவதால் உருவாகும் நிறைவையும் இன்பத்தையும் ஒருவரால் உணரமுடியும். ஒரே நேரத்தில் வழங்குபவருக்கும் பெறுகிறவருக்கும் நிறைவை அளிக்கும் மகத்தான செயல் சேவை மட்டுமே என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகளைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்கள் அனைவரும், காந்தியடிகளின் கூற்றுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர்கள், மிகநீண்ட பட்டியலைக் கொண்ட அந்த ஆளுமைகளின் வரிசையில் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சித்திரங்கள் -
குணப்படுத்தும் சக்தியை பயன்படுத்துவது எப்படி
RM20.00கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக புதிய ஏற்பாட்டில் பதிவாகியுள்ள அதிசயங்களில் இஏசு பயன்படுத்திய குணமாக்கும் கோட்பாடுகளை, அதே முறையில் இன்றளவும் நம்மால் பின்பற்ற முடியும். உங்களுக்குள் இருக்கும் கடவுளின் குண்மளிக்கும் தன்மையுடன் உங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதன் முலம் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நோயின் அறிகுறிகளை புறக்கணிப்பதன் மூலமும் மூலமும் உங்கள் மனதையும் உடலையும் உங்களால் குணப்படுதிக் கொள்ள முடியும். குணப்படுத்தல் குறித்த டாக்டர் ஜோசஃப் மர்ஃபி அவர்களின் உன்னதமான படைப்புகளை இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த பதிப்பு இது. இந்த பதிப்பில் ஆரோக்கியம், செல்வச்செழிப்பு, உறவுகளை பேனுவது மற்று ம் சுய வெளிபாட்டிற்கான தியானங்கள், நேர்மறை உறுதிப்படுத்தல்களின் நுட்பங்களும் அடங்கியுள்ளது.
-
உப பாண்டவம்
RM34.20இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.
மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.
ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.
-
நம்மைச் சுற்றி காட்டுயிர்
RM5.00சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
-
பொய்த்தேவு
RM17.00சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.
-
புயலிலே ஒரு தோணி
RM33.00ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.
நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.









