Author | |
---|---|
Publications | புலம் |
Related products
-
குட்டி இளவரசன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.” -
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
கோபல்ல கிராமம்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
-
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
-
கோவேறு கழுதைகள்
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.
-
நாளை மற்றுமொரு நாளே
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!
-
அஞ்ஞாடி
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…
-
18வது அட்சக்கோடு
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் பார்த்ததில்லை.