Author | |
---|---|
Publications | உயிர்மை |
பூமியை வாசிக்கும் சிறுமி
RM12.00
நவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது.
Out of stock
Related products
-
சஞ்சாரம்
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
-
வீடியோ மாரியம்மன்
ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
கூத்து வைக்காம வுட்டுப்புடாத.– நாவலிலிருந்து
-
உறுபசி
நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
-
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
துயில்
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.
-
ஒரு கடலோர கிராமத்தின் கதைல்
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.
-
பிறகு
பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.
-
கடவு
திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.