Author | |
---|---|
Publications | எதிர் வெளியீடு |
Related products
-
சுல்தானின் பீரங்கி
நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலாதியானது. கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘சுல்தானின் பீரங்கி’ அவரது இரண்டாவது உலகச் சிறுகதைகள் தொகுப்பாகும். மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பின் கதைகள் யுத்தம், புலம்பெயர்வு, விளிம்புநிலை வாழ்வு, இருத்தலின் குரூர அபத்தம் போன்றவற்றை மையப்படுத்தியவை. மிகச் சவாலான இலக்கிய வடிவமான சிறுகதை, வரையறுக்கப்பட்ட வெளிக்குள் சிறுகதை ஆசிரியன் நிகழ்த்தும் ஒரு புனைவுச் சாகசம் என்ற எண்ணம் இக்கதைகளின் தொனி, வடிவம், கூறுமுறை இவற்றை வாசித்தறிகையில் உறுதிப்படுகிறது. சமரசமற்றதொரு கறார்த்தன்மையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் மூலப்பிரதிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அதேவேளை சரளமான வாசிப்புக்கு ஊறு தராதவை. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு வளமூட்டக்கூடிய தொகுப்பு இது. – அசதா
-
அந்தோன் செகாவ்: சிறுகதைகளும் குறுநாவல்களும்
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டு விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக் கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டுத் துறந்து விடுவார்களே.
-
உருமாற்றம்
ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்.
காஃப்கா நவீனக் கலைமரபில் ஜேம்ஸ் ஜாய்ஸ், பிக்காசோ, மல்லார்மே ஆகியோருடன் வைத்து எண்ணத்தக்கவர் என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய கலை “புதிர் நிறைந்த தெளிவு. இலக்கியம் இது வரையில் சந்தித்திராத நம்மை உலுக்கிப் பிழியும் பூடகமான படைப்பு,” என்றார் ஒரு விமர்சகர். கவிஞர் டபிள்யு. எச். ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் தாந்தே என்று புகழ்ந்தார். -
சிலுவையில் தொங்கும் சாத்தான்
பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி.1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் (15,000 பிரதிகள்) கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். கனவுகளுக்கும் கசப்பான உண்மைகளுக்கும் நடுவே, மாயத்தோற்றங்களுக்கும் மறுக்கவியலா எதார்த்தத்திற்கும் நடுவே நாவல் கட்டவிழ்கிறது. கென்யாவின் அரசியல் – பொருளாதார – பண்பாட்டு விடுதலையைக் கோரும் உணர்ச்சிமயமான குரலை மரபுவழி கதைசொல்லும் பாணியும் பிரெக்ட், புன்யான், ஸ்விப்ட், பெக்கெட் போன்றோரின் புதிய பாணியும் இரண்டறக் கலந்த மொழியில் கூகி இந்நாவலைப் படைத்துள்ளார்.
-
-
மணற்குன்று பெண்
women in the dunes | kobo abe உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதன் தாக்கத்தில் பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம் முன்வைக்கிறார். நாவலின் கதாநாயகனின் பார்வையின் வாயிலாக, அவர் நம் முன்வைக்கும் உள, சமூக மற்றும் இருத்தலியல் குறித்த விவாதங்கள் கவனிக்கபட வேண்டியவை.
-
இருண்ட காலக் கதைகள்
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான். அந்த வகையில் நாம் வாழும் இக் காலம் ஓர் இருண்ட காலம் என்றாகிறது.. இதற்கெல்லாம் என்ன முடிவு, நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம் என நம் யாருக்கும் புரியவில்லை என்பதைத்தான் இந்தப் படைப்புகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலை பதினேழு சமகால எழுத்தாளர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. – அ. மார்க்ஸ்
-
தீம்புனல்
இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல்நாவல் இது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்த நாவல் அடையாளம் காண்கிறது. கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது. – மனுஷ்ய புத்திரன்