| Author | |
|---|---|
| Publications | கொம்பு வெளியீடு ச்ம் |
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி
RM10.00
பெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகைமிக ரசித்துக்கொண்டுதானிருக்கிறது பஃறுளியிலிருந்து கூவத்துக்கான நீளத்தில் ஒரு செய்யுள் வார்த்து மணல்கடிகாரத்தின்முன் படையலிடும் பாணனின் பெருமூச்சு கொல்லரின் உலையைத் தூண்டுகிறது அணங்கின் நெஞ்செலும்பு பாளையைத் தட்டி வடிக்க ஏதுவாயிருக்கிறது “பாலூட்டிகள் மட்டுமே கனவு காண்கின்றன’ உள இயல் நடனத்தில் கலயங்கள் முலைகளாய் ஆடுகின்றன.
Out of stock
Related products
-
பிறகு
RM27.50பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.
-
கடவு
RM16.00திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.
-
சாயாவனம்
RM25.00சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.
-
புயலிலே ஒரு தோணி
RM33.00ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.
நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
-
வீடியோ மாரியம்மன்
RM18.00ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
கூத்து வைக்காம வுட்டுப்புடாத.– நாவலிலிருந்து
-
கோபல்ல கிராமம்
RM24.00பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
-
பொய்த்தேவு
RM17.00சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.
-
சஞ்சாரம்
RM30.60தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.









