விழிப்பு (புதுமைதாசன்)
RM20.00
திகில்! மர்மம்!
பிரவிதோறும் விபத்து!
மரண ஒரே இடத்தில்!
என்ன மாயம்! என்ன மர்மம்!
Out of stock
Related products
-
ஆண்டனி கிளியோபாட்ரா
ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!
– கிளியோபாட்ரா-
-
ஓந்தி
குமார் வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைக் கலாப்பூர்வமாகப் படைத்திருப்பது முக்கியமாகப் படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது தமிழ் சிறுகதை சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பை செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது.
-சு.வேணுகோபால்.
-
புதுமைதாசன் கதைகள் (தொகுப்பு)
மாந்தர்தம் பல்வேறு குணவியல்புகளை அகழ்ந்து சித்தரிக்கும் அருந்தொகுப்பு
-
மன்னன் லியர்
ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.
-
Dogs and Other Plays
Four outspoken short plays penned by controversial Singapore writer Elangovan, whose satire and black humor is likely to leave the audience shaken but perhaps ready for some rethinking about today’s lifestyles.
-
Buang Suay and Other Plays
A collection of three plays by the experimental (and controversial) Singapore playwright and poet, Elangovan. The plays — Mamadrama, Dogs and Buang Suay — explore untouched Singapore realities, stimulating creative thinking and provoking shock and controversy. With support from the National Arts Council Publishing Grant.
-
கரையும் தார்மீக எல்லைகள்
சிறந்த படைப்பு ஏற்படுத்துகிற உளக்கிளர்ச்சி, அழகியல் / கோட்பாடு சார்ந்த ரசனையை ஏற்படுத்தி நம்மைப் பண்படுத்துகிறது. தான் அறிந்ததைப் பிறரும் அறியச்செய்கிறது. சிவானந்தத்தின் இந்தப் புத்தகம் செய்வது அதைத்தான். வாசிப்பினூடாகக் கிடைத்த அனுபவச் சேர்மானங்களைச் செரித்து, ஆளுமைகள், எழுத்தாளர்கள், தலைவர்கள், தொழில்நுட்பம், நிதிமேலாண்மை போன்ற தலைப்புகளில் உள்ளடக்கித் தந்திருக்கிறார். போலிப் பாவனைகளையும் உள்ளார்ந்த வெளிப்பாடுகளையும் பிரித்தறியும் நுண்ணுணர்வை இந்தக் கட்டுரைகள் நமக்களிக்கின்றன.
-
அஞ்சல் நிலையம்
அஞ்சல் நிலையம்
ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன.