Showing 61–80 of 96 results

  • நூறு நிலங்களின் மலை

    நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) – ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்.

    RM16.00
  • குகைகளின் வழியே

    குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) – ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர. இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.

    RM14.40RM16.00
  • இந்திய ஞானம் – தேடல்கள், புரிதல்கள்

    இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.

    RM31.50RM35.00
  • அருகர்களின் பாதை

    ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர்.

    RM28.00
  • புல்வெளி தேசம்

    நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது. – ஜெயமோகன்

    RM20.25RM22.50
  • முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள்

    நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.

    RM16.00
  • தனிக்குரல்

    தனிக்குரல்
    பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன்.
    எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.
    இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது.
    – ஜெயமோகன்

    RM25.00
  • நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்ப்ப்

    ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது.

    RM40.00RM44.00
  • நாவல் கோட்பாடு

    நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் – இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா?

    இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.

    RM15.75RM17.50
  • புத்தரின் வரலாறு

    நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பெளத்த மத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் ப்த்த சரித்திரம் எழுதப்பட்டது.

    RM13.00
  • புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

    நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.

    RM15.00
  • பாலைவனப் பூ

    நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.

    RM40.00
  • தலித் இலக்கிய வரலாறு

    ‘தலித் இலக்கிய வரலாறு’ மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது. அள்ளிப்பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளையும் கலை இலக்கியப் பிரதிகளையும் இன்னும் எவ்வளவு காலம் சீர்படுத்தி வகுத்துத் தொகுப்பது என்ற மலைப்பிலும் இருப்பதை முறைப்படுத்தி நூலாக வருகிறது. இதனுடைய இரண்டாம் பாகம் வெளிவரும்போது மட்டுமே ஆசிரியரின் உழைப்பு எதை நோக்கியது என்பதைத் தீர்மானமாக வரையறுக்க இயலும். தலித் படைப்பாசிரியர்களின் பெரும்பாலானப் பெயர்கள் அழித்தொழிக்கப்பட்டது, படைப்புகளின் சாதகபாதகங்கள் பேசப்படாமல் போனது மட்டுமே இந்நூல் வெளிவந்தாக வேண்டிய அவசியத்தின் காரணமாகிறது. இதனை இந்நூல் உங்களுக்குப் புரிய வைத்திடுமாயின் அதுவே இந்நூலின் வெற்றி.

    RM35.00
  • மனசிலாயோ

    கேரள பயண அனுபவம் குறித்து சுவாரசியமான அனுபவ நூல்

    RM10.00
  • விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு

    மலேசியா மற்றும் தமிழகத்தில் வெளிவந்த சில நாவல்கள் குறித்த ரசனை விமர்சனங்கள் அடங்கிய நூல்

    RM10.00
  • தீர்ந்து போகாத வெண்கட்டிகள்

    குழந்தைகள் சினிமா குறித்த கட்டுரைகள்

    RM10.00
  • சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை

    அ.ரெங்கசாமி அவர்களின் சுய வரலாறு அடங்கிய நூல்.

    RM20.00
  • துணைக்கால்

    பதிப்புத்துறை குறித்தும் அதன் சட்ட நுணுக்கங்கள் குறித்தும் விரிவான கட்டுரைகள் அடங்கிய நூல்

    RM10.00