Showing all 3 results

  • அஷேரா

    அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள். அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள்.

    கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.

    அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.

    நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப்போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?

    RM19.00
  • ஆறாவடு

    கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுக்கள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன. இந்திய இராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கிய போது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்கு குழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் ஓர் அமிலமாய் தெறித்தது. நீண்ட பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் – புலிகள் பேச்சுக்காலத்தின் போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள். பேச்சுவார்த்தையின் தேனிலவுக்காலம் அதீத நம்பிக்கைகளை அவர்களிடத்தில் ஊட்டியிருந்தது. ஈற்றில் அந்த அமைதியின் முடிவும் முன்னெப்போதும் இல்லாத பெரும் ஊழிக்காலக் கொரூரத்தை உருவாக்கி கழிந்து போனது. இப்படியான, 87 இல் தொடங்கி 2003 வரையான இந்த இரண்டு அமைதிக்கான காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதைகள் நகர்கின்றன.

    RM13.00
  • திருமதி. பெரேரா

    திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர் நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர்
    தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம்.

    RM14.00