-
மிதந்திடும் சுய பிரதிமைகள்
சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்சப் பங்களிப்பு இதுதான் என்று தோன்றியது. அத்துடன், சீனக் கவிதை மொழி பெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் அந்தத் தேடலே அவருக்கு உதவியுள்ளது. இது தமிழுக்குப் புதிது. வெறுமே ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீனக்கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அவற்றைவிட இந்த நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுகளுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். மிதந்திடும் சுய பிரதிமைகள் அதற்கான பல வெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. – வ,ஐ.ச ஜெயபாலன்
-
மணலின் கதை
காற்றிற்கு வாடைக் காற்று புயல் காற்று மழைக் காற்று அனல் காற்று கடல் காற்று என்றெல்லாம் பெயர்கள் எந்தப் பெயரும் இல்லாமல் எதையும் கடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன நமது உலகில் அவை உயிரூட்டப் போராடுகின்றன கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் வண்டுகளுக்கு – மனுஷ்ய புத்திரன்
-
பூமியை வாசிக்கும் சிறுமி
நவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது.
-
சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்
பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை, ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ் – ‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’ – இளைஞர்களின் நெஞ்சை அள்ள சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல்.
-
சாப்ளினுடன் பேசுங்கள்
உலக சினிமா பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதி வரும் கட்டுரைகள் ஒரு மகத்தான கலையின் அற்புதமான தருணங்களை நம்முள் மீள்படைப்புச் செய்பவை. பிம்பங்களின் பின்னே ததும்பும் வாழ்வின் மகத்தான தரிசனங்களை இனம் காட்டுபவை. சினிமாவைப் புரிந்துகொள்வதற்கான காட்சி மொழியை நோக்கி வாசகனை இக்கட்டுரைகள் வெகு நுட்பமாக நகர்த்திச் செல்கின்றன.
-
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன.
-
1001 அரேபிய இரவுகள் (ஒன்றாம் இரண்டாம் தொகுதி)
(One Thousand and One Nights) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். தமிழில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.