Showing 21–40 of 60 results

  • இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

    இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது. பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்வது சாத்தியம் என்பது பிரச்னை. நூலளவே யாகுமாம் நுண்ணறிவு என்பது ஒரு வழிகாட்டியாகும். டால்ஸ்டாயின் நூல்களைப் படித்துப்படித்து டால்ஸ்டாய் ஆகி விட முடியாது என்பது ஒன்று – டால்ஸ்டாய் ஆக வேண்டுமா என்பது இன்னொன்று. ஆனால் டால்ஸ்டாயைப் படித்துப் படித்து அன்பு என்னும் சிந்தனையையும் வேறு பல மகோந்நதமான சிந்தனைகளையும் பழக்கப் படுத்திக்கொள்ளலாம். ஷேக்ஸ்பியர் என்கிற இலக்கியாசிரியனைப் படித்து மனிதனின் சாதாரணத்தையும் அசாதாரணத்தையும், மேன்மையையும், தாழ்மையையும் புரிந்துகொள்ளலாம். டாஸ்டாவ்ஸ்கியின் நாவல்களைப் படித்துப் படித்து மனிதனின் ஆன்மிகத்தின் மேற்போக்கையும் – கீழ்ப்போக்கையும்தான் – உணரலாம். இப்படி எத்தனை எத்தனையோ இன்பங்களை இலக்கியத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் இலக்கியாசிரியர்கள். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சுவைக்கக் கற்றுக்கொண்டால் இலக்கிய ரசனை ஏற்பட்டுவிடுகிறது. -க.நா.சுப்ரமண்யம்

    RM18.00
  • வாசிப்பது எப்படி?

    வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.

    RM10.00
  • லத்தீன் அமெரிக்க சினிமா

    “ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் ‘புதிய’ கதைகளையும் ‘புதிய’ உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.” புத்தகத்திலிருந்து…

    RM21.30
  • நிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை)

    “ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”

    நூலிலிருந்து…

    RM38.00
  • தாந்தேயின் சிறுத்தை

    கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.

    RM34.00
  • சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்

    சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.

    RM35.00
  • பழுப்பு நிறப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)

    என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். – சாரு நிவேதிதா

    RM110.00
  • கலகம் காதல் இசை

    என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை என்னி நான் பரவசமடைகிறேன். -மைக்கேல் ஜாக்ஸன்

    RM18.00
  • தெருக்களே பள்ளிக்கூடம்

    ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நாங்கள் நிறைமகிழ்வு அடைகிறோம். கனவொன்று நிஜமாதல்போல இது இக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு வெளியே திறந்துகிடக்கும் கல்விவெளி எவ்வளவு பரந்துவிரிந்தது என்பதை இப்புத்தகம் நிச்சயம் நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டும். ஓராண்டு பள்ளிக்கல்வியைத் துறந்து, விடுமுறை எடுத்து பயணங்களின் வழியாகவும் களப்பணிகள் வழியாகவும் ராகுல் அல்வரிஸ் கற்றுக்கொண்ட வாழ்வனுபவத்தின் எழுத்துவெளிப்பாடே இப்புத்தகம். இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Organic Farming Association of India – OFAI) தலைவராக இருந்தவரும், தேசிய அளவில் சூழலியல் சார்ந்த பெரும் பொறுப்புகளை வகித்த சூழலியலாளருமான ‘கிளாட் அல்வாரிஸ்’ அவர்களின் மகன் ‘ராகுல் அல்வரிஸ்’. பெரும் தொகையளித்து நாம் வளர்க்கிற ‘பள்ளிக்கூடம்’ என்னும் நிறுவனங்களால் வழங்க முடியாத ஒரு வாழ்வுக்கற்றலை, நம்மால் தெருவில் இறங்கிப் பெறமுடியும் என்பதற்கான நேரடிச்சாட்சியாக தன் மகன் ராகுல் மாறுவதற்கான முழுச்சுதந்திரத்தை அளித்தார் கிளாட் அல்வரிஸ். பெற்றோர் வழங்குகிற சுதந்திரமும், பிள்ளைகள் ஏற்கிற பொறுப்புணர்வும் ஒன்றுகுவியும் புள்ளியில் விடுதலைக்கல்வி மலர்கிறது. வெறும் வாழ்வனுபவ பயணக்குறிப்பு எனச் சுருங்கிவிடாமல், மீன், மண்புழு, சிலந்தி, ஆமை, காளான், பாம்பு, முதலை உள்ளிட்ட பல்வேறு உயிர்களைப்பற்றிய ஆவணத்தொகுப்பாகவும் இப்புத்தகம் முக்கியப்படுகிறது. புளியானூர் கிராமத்துக் குழந்தைகளுக்கான மாலைநேரத் திண்ணைப்பள்ளியையும், பொன்மணி முன்னெடுக்கும் பெண்களுக்கான தையல்பள்ளியையும், அர்விந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்புநாளன்றே தனது சேவைக்கரங்களால் திறந்துவைத்தார். அந்த மண்தரையில் அமர்ந்து அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தையின் விடுதலைக்கான கனவுவிதை. அதைத் தொடர்ந்து அவ்வப்போது அந்தக் கிராமத்துக் குழந்தைகள் காடுகள், பறவைகள், வனவுயிர்கள், நீரோடைகள் குறித்துச்சொன்ன எல்லாக் கதைகளும் தகவல்களும் ஒன்றே ஒன்றைத்தான் எங்களுக்குச் சுட்டிக்காட்டின. தெருக்களே மனிதனின் முதற்பள்ளிக்கூடம்! பள்ளிக்கூடங்களின் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் பாடப் புத்தகங்களுக்குள்ளும் கற்க இயலாத இயற்கையறிவை, குழந்தைகள் சுதந்திரமாகவும் எளிமையாகவும் பெற்றடைவது, விரிந்துபரவும் வீதிகளில் இருந்துதான்! ‘விளையாட்டுகளே உயரிய ஆய்வு வடிவங்கள்’ என்ற ஐன்ஸ்டீன் சொன்னதை யோசித்துப்பார்க்கையில், வகுப்பறைகளைவிட ஒரு பள்ளிக்கூடத்திற்கு மைதானம் எவ்வளவு முக்கியம் எனத் தெரியவரும்! அவ்வகையில் பார்த்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தெருவே முதற்குரு. எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய ஒரு சிறுகதையின் ஒற்றைவரி இக்கணம் மனதில் உதிக்கிறது, “அழுக்கப்படாத படிப்பு படிப்பில சேத்தியா?”

    RM20.00
  • சிலேட்டுக்குச்சி

    குழந்தைகளின் உளவியலைக் கற்றுக்கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவத் தொகுப்பை வாசித்தால் போதும். அதுமட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பதால் கூடுதலான வாசிப்பு இன்பத்தை இவை வாரி வழங்குகின்றன. – ச தமிழ்ச்செல்வன்

    RM11.00
  • பெரியார்: இன்றும் என்றும்

    சமுதாயம், மதம், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுவதும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தலைப்புகள் காலம், இடம் விவரங்களுடன் அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.

    RM72.00
  • சாட்சி சொல்ல ஒரு மரம்

    அரசியல்,  பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் – கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி – ‘சாட்சி சொல்லும் மரமா’க உருக்கொள்கின்றன. சமத்துவமும் நீதியும் நிறைந்த சமுதாயம் பற்றிய கனவுகள், கற்பனைகள், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கி விடுவதில் ‘கருந் துளையை’ ஒத்த நமது சமகால உலகம் தரும் முற்றிலும் எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்து நம்மை ஓரளவு மீட்டு ஆறுதலளிக்கும், ஆசுவாசப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகள் சில இயன்ற அளவு எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அவற்றினூடே வெளிப்படும் சமூகவியல், அரசியல், தத்துவப் பார்வைகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.

    RM60.00
  • இருத்தலியமும் மார்க்ஸியமும்

    பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

    RM28.50
  • மிதந்திடும் சுய பிரதிமைகள்

    சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்சப் பங்களிப்பு இதுதான் என்று தோன்றியது. அத்துடன், சீனக் கவிதை மொழி பெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் அந்தத் தேடலே அவருக்கு உதவியுள்ளது. இது தமிழுக்குப் புதிது. வெறுமே ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீனக்கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அவற்றைவிட இந்த நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுகளுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். மிதந்திடும் சுய பிரதிமைகள் அதற்கான பல வெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. – வ,ஐ.ச ஜெயபாலன்

    RM20.00
  • இன்றைய காந்தி

    காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது.

    RM45.00RM50.00
  • சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

    சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி,கருத்தில் தெளிவு கூடுகிறது. சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்றபழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல், பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம்’என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. – பழ. அதியமான்

    RM13.00
  • கரையும் தார்மீக எல்லைகள்

    சிறந்த படைப்பு ஏற்படுத்துகிற உளக்கிளர்ச்சி, அழகியல் / கோட்பாடு சார்ந்த ரசனையை ஏற்படுத்தி நம்மைப் பண்படுத்துகிறது. தான் அறிந்ததைப் பிறரும் அறியச்செய்கிறது. சிவானந்தத்தின் இந்தப் புத்தகம் செய்வது அதைத்தான். வாசிப்பினூடாகக் கிடைத்த அனுபவச் சேர்மானங்களைச் செரித்து, ஆளுமைகள், எழுத்தாளர்கள், தலைவர்கள், தொழில்நுட்பம், நிதிமேலாண்மை போன்ற தலைப்புகளில் உள்ளடக்கித் தந்திருக்கிறார். போலிப் பாவனைகளையும் உள்ளார்ந்த வெளிப்பாடுகளையும் பிரித்தறியும் நுண்ணுணர்வை இந்தக் கட்டுரைகள் நமக்களிக்கின்றன.

    RM15.00