Showing all 5 results

  • அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

    கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள், ஒரே ஒரு அமெரிக்க வாழ்வியலை பேசும் சிறுகதை, இது மட்டுமல்லாமல் ஒரு புதிய சிறுகதை ஒன்று என்று மொத்தமாக அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து அமெரிக்கச் சிறுகதைகள் என்கிற இந்த புத்தகத்தை வெளியிடுகிறோம். இதில் 26 அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கதை மட்டும் தமிழில் நேரிடையாக எழுதப்பட்ட அமெரிக்க வாழ்வியலைப் பேசும் சிறுகதை. வாசகர்களுக்கு அறிதல் தரும் வகையில் அமெரிக்க எழுத்தாளர்களின் காலவரிசைப்படி அனைத்து சிறுகதைகளும் குறிப்பிட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது. பரந்து விரிந்திருக்கும் அமெரிக்க இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்லும் எந்தவொரு தமிழ் வாசகனுக்கும் இத்தொகுப்பு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் ஒரு வழிகாட்டியாக என்றென்றும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்

    RM50.00
  • ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

    ஜப்பானிய இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்ல விரும்பும் எந்தவொரு வாசகனுக்கு இந்த தொகுப்பு மிகச்சிறந்த வழிகாட்டியாக ஓரளவுக்கு இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

    RM40.00
  • நெட்டுயிர்ப்பு

    “மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை.”

    RM20.00
  • நகுலன் 100 – நூற்றாண்டுச் சிறப்பிதழ்

    இச் சிறப்பிதழில் (இணையதளத்தில்) இல்லாத மூன்று புதிய கட்டுரைகள் மற்றும் நகுலனின் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை மற்றும் குறுங்கதை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 29 மிகச்சிறந்த ஆக்கங்களுடன் நகுலன் என்கிற தமிழிலக்கியத்தின் தனித்துவமான கவிஞனின் பல்வேறு பக்கங்களை இரசனையுடன் அதே நேரத்தில் விமர்சன நோக்கிலும் அணுகும் ஒரு புத்தகமாக இந்த நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் புத்தகம் இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

    RM30.00
  • மழைநிலாக் கதைகள்

    கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக “மழை நிலாக் கதைகள்” நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள்இவை.

    RM20.00