-
-
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. – சுகுமாரன்
-
சுகுமாரன் கவிதைகள்
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமாக கொண்டவை.
-
தீராப் பகல்
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையும் சொல்லலாம். இவற்றில் விசாரத்தைவிட விசாரணையும் விசாரணையைவிட விவரிப்பும் வலுவானவை. –சுந்தர ராமசாமி 1990 முதல் எழுதிவரும் எம். யுவனின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பே ‘தீராப் பகல்’. அவரது ஐந்து தனித் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் எழுதிய புதிய கவிதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. அறிந்தவற்றிலுள்ளில் இயங்கும் அறியப்படாத காலத்தையும் அறியத் தவறிய வெளியையும் பெருந்திரட்டின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.
-
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
வாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன்.
-
-
-
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி
பெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகைமிக ரசித்துக்கொண்டுதானிருக்கிறது பஃறுளியிலிருந்து கூவத்துக்கான நீளத்தில் ஒரு செய்யுள் வார்த்து மணல்கடிகாரத்தின்முன் படையலிடும் பாணனின் பெருமூச்சு கொல்லரின் உலையைத் தூண்டுகிறது அணங்கின் நெஞ்செலும்பு பாளையைத் தட்டி வடிக்க ஏதுவாயிருக்கிறது “பாலூட்டிகள் மட்டுமே கனவு காண்கின்றன’ உள இயல் நடனத்தில் கலயங்கள் முலைகளாய் ஆடுகின்றன.
-
உச்சினியென்பது: மாரி செல்வராஜின் சொற்கள்
நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.
-
மிளகு
கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா. மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் திணையின் இயற்கை சாட்சியான ஓர் இளம்வாழ்வும் அதன் பாடுகளும், விட்டு வெளியேறுதலின் மூட்டமான திகைப்பும் நகங்கடித்தலும், பின் திரும்பிப்பார்க்கையில் பறிகொடுப்பதன் அரசியல் பிரக்ஞையும் பதட்டமும் ஆங்காரமும் என மலையைப் போலவே கரடுமுரடான, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, சமகாலமும் கடந்தகாலமும் முயங்கும் ஒரு நீண்ட நாடகத்தை, கவிதைகளின் வழியே உருவாக்குகிறார். எலும்பும் தோலுமான மதிப்பீடுகள், நுகர்வு வெறி, பருவநிலை மாற்றம், நியான் விளக்குகளின் பெருக்கம் என்றாகிவிட்ட காலத்தில், ஒரு திக்குவாய் சிறுமியைப் போல நாம் மறந்ததையும் இழந்ததையும் நினைவூட்டி, நமக்கும் மலைக்கும் ஏன் நமக்கும் நமக்குமே கூட எவ்வளவு தொலைவு பாருங்கள் என்கின்றன இக்கவிதைகள். – வே. நி சூர்யா
-
வியனுலகு வதியும் பெருமலர்
பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்கின்றன. அவஸ்தைகளால் கொந்தளிக்கின்றன. இவற்றையெல்லாம் தருணங்களாய் உணர்கின்றன. அன்றாடங்கள் அனைத்திலும் சுதந்திரம் கேட்கும் ஒரு குரல் இத்தொகுப்பின் பிரதான படிமமாகியிருக்கிறது. காலந்தோறும் அறத்தினால் செலுத்தப்படுமோர் இன மரபின் ஆவேசத்தையும் பெருங்கருணையையும் கையாலாகத் தனத்தையும் நம் முன் அளிக்கிறது. அதேவேளை நமது இருப்பின் மன எழுச்சியையும் அமைதியையும் அபூர்வமாய் குறியீட்டுத் தன்மையாக்கும் வல்லபமும் இத்தொகுப்பில் அசாதாரணமாய் நிகழ்ந்திருக்கிறது. இதுவோர் அரூப தரிசனம், இவரின் கவிதைகளை தரிசிக்க விழையும் ஒரு வாசகனுக்குத் திறவுகோலாய் இக்கவிதை அமையக்கூடும்.
-
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா. அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும். மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது. ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’ – தேவதேவன்
-
அபி கவிதைகள்
அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே.
– ஜெயமோகன்.
அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் – இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.
– தேவதேவன்.
-
மணலின் கதை
காற்றிற்கு வாடைக் காற்று புயல் காற்று மழைக் காற்று அனல் காற்று கடல் காற்று என்றெல்லாம் பெயர்கள் எந்தப் பெயரும் இல்லாமல் எதையும் கடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன நமது உலகில் அவை உயிரூட்டப் போராடுகின்றன கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் வண்டுகளுக்கு – மனுஷ்ய புத்திரன்
-
பூமியை வாசிக்கும் சிறுமி
நவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது.
-
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன.
-
கொங்குதேர் வாழ்க்கை 2
ழின் சிறந்த நவீன கவிதைகளின் தொகுப்பு இது. பாரதியார் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் கவிஞர்கள் குறித்த குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளது.
-
-
-
அமைதியின் நறுமணம்
இந்தியப் படைகளுக்கு மணிப்பூரிலும் வேறு சில பகுதிகளிலும் 1958 கிதிஷிறிகி சட்டப்படி சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இது ஒரு கொடுமையான சட்டமாகக் கருதப்படுகிறது. இதை அகற்றிவிட வேண்டும் என்பதுதான் ஷர்மிலாவின் கோரிக்கை. இதற்காகக் கடந்த பத்து ஆண்டுகளாக – நவம்பர் 4, 2000 முதல் – ஷர்மிலா மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஷர்மிலாவை உயிருடன் வைத்திருக்க அவர் மூக்கில் புகுத்தப்பட்ட குழாய் மூலம் வற்புறுத்தி அவருக்கு உணவு ஊட்டப்படுகிறது. இந்த வித்தியாசமான போராட்டம் வட கிழக்குப் பகுதிகளில் போராடிவரும் பலருக்கு ஒரு சக்திவாய்ந்த சின்னமாகிவிட்டது. ஷர்மிலாவுக்கு இளம் வயதுப் பெண்கள் விரும்பிப் போற்றும் சில விஷயங்களுக்கான ஏக்கங்கள் உண்டு : காதல், சுதந்திரம், ‘சுதந்திரமான’ வாழ்க்கையை வாழும் இயல்பான மகிழ்ச்சி, வெகு சாதாரணமான விஷயங்களான நீர் பருகும் அனுபவம், பல்லைத் தேய்க்கும் சுகம் இவற்றுக்கான ஏக்கம். மைதைலான் மொழியில் எழுதப்பட்ட இதிலுள்ள கவிதைகள், தனியாகப் போராடும் ஒரு பெண்ணின் வலியுடன் கூடிய ஊமைக்காயங்களைச் சொல்பவை.