Showing 101–117 of 117 results

  • கோபிகிருஷ்ணன் படைப்புகள்

    கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.

    RM120.00
  • விஷக் கிணறு

    அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து  கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் தேர்வு செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்குக் காரணமான சிக்கலைக் காட்டிலும் பூதாகரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்கக்கூடுமா? எத்தனைக் கேள்விகள்?

     

     

    விஷக்கிணறு அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.

    RM20.00
  • இசூமியின் நறுமணம்

    இசூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.

    RM17.00
  • அம்புப் படுக்கை

    பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமென கதறவில்லை துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி இயன்றவரை ஒத்திப் போடுவதாக வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது இக்கதை மாந்தர்களைப் போல.

    RM15.00
  • ட்ரங்கு பெட்டிக் கதைகள்

     

    பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சிந்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவன், ஓவியங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சிலது மறுவுருப்பெற்று இருக்கின்றன.

    RM15.00
  • ஓந்தி

    குமார் வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைக் கலாப்பூர்வமாகப் படைத்திருப்பது முக்கியமாகப் படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது தமிழ் சிறுகதை சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பை செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது.

     

    -சு.வேணுகோபால்.

    RM14.00
  • நன்மாறன் கோட்டைக் கதை

    பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள்
    பலவும் மிகச் சாதாμணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட
    முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை
    இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம்
    சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல்
    என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித
    முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே
    ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை
    என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக
    எடுத்துச்சொல்கிறார்.

    RM20.70
  • மண்பாரம்

    இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்… ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.

    இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.

    RM24.30
  • கொலைச் சேவல்

    ‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.

    RM23.00
  • சாவுசோறு

    என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்…

    RM17.10
  • நறுமணம்

    இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்
    பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய
    தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்
    அதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்
    உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,
    இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்
    இவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி
    போன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக
    மக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்
    எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்
    எழுப்புகிறார்.

    RM19.80
  • கடவு

    திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.

    RM16.00
  • போயாக்

    தமிழில் மிகச்சிறந்த சிறுகதைகள் அடங்கிய நூலாக போயாக் சிறுகதை தொகுப்பு உருவாகியுள்ளது – சு.வேணுகோபால்

    RM15.00
  • CHILDREN OF DARKNESS

    மலேசியாவின் நான்கு நவீனத் தமிழ் இலக்கியவாதிகளின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்.

    RM10.00
  • இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்

    கே.பாலமுருகனின் தேர்ந்தெடுத்த இக்கதைகள் அந்நியமாதல் சிக்கலை வலுவாகப் பேசும் புனைவுகள். தோட்டத்தில் இருந்து பெயர்ந்த உதிரி மனிதர்களின் வாழ்வை இக்கதைகள் பேசுகின்றன.

    RM10.00
  • கே.எஸ்.மணியம் சிறுகதைகள்

    தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் இது.

    RM15.00
  • மஹாத்மன் சிறுகதைகள்

    மலேசியாவின் இருண்ட பகுதிகளைப் புனைவாக்கியவர் மஹாத்மன். அவரது விவரிப்பில் ஒரு வாசகன் காண்பது அதுவரை நம் கண்களுக்கு எளிதில் அகப்படாத மனிதர்களும் வெளியும்தான்.

    RM10.00