-
சின்னஞ்சிறு பழக்கங்கள்
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
Only 1 left in stock
-
இரகசியம் எப்படி என் வாழ்க்கையை மாற்றியது
கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல். ‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
In stock
-
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
நேர்மறைச் சிந்தனையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, தைகள் விரும்பிய அற்புத விளைவுகளைப் பெற்றுள்ள ஆயிரகணக்கான மக்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்புத்தகம். நீங்கள் கனவில்கூட நினைத்து பாத்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மனஅமைதி ஆகியவற்றை நீகள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த அற்புதமான கையேடு இந்நூல். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றில் இருந்து மிக சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்க்கும் சிந்தனைதான் நேர்முகசிந்தனை. நேர்முக சிந்தனையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சன் பீல், இப்புத்தகத்தில் எளிய படு சுவாரஸ்யமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார். இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்றுக்கொள்ளலாம்: அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி. மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது எப்படி. மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி. எதுவென்றாலும் அசைக்கமுடியாத, பாதுகாப்பை பெறுவது எப்படி. நீங்கள் பயப்படும் விசயங்களை துணிந்து செய்து முடிப்பது எப்படி மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது எப்படி
Only 1 left in stock
-
குணப்படுத்தும் சக்தியை பயன்படுத்துவது எப்படி
கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக புதிய ஏற்பாட்டில் பதிவாகியுள்ள அதிசயங்களில் இஏசு பயன்படுத்திய குணமாக்கும் கோட்பாடுகளை, அதே முறையில் இன்றளவும் நம்மால் பின்பற்ற முடியும். உங்களுக்குள் இருக்கும் கடவுளின் குண்மளிக்கும் தன்மையுடன் உங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதன் முலம் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நோயின் அறிகுறிகளை புறக்கணிப்பதன் மூலமும் மூலமும் உங்கள் மனதையும் உடலையும் உங்களால் குணப்படுதிக் கொள்ள முடியும். குணப்படுத்தல் குறித்த டாக்டர் ஜோசஃப் மர்ஃபி அவர்களின் உன்னதமான படைப்புகளை இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த பதிப்பு இது. இந்த பதிப்பில் ஆரோக்கியம், செல்வச்செழிப்பு, உறவுகளை பேனுவது மற்று ம் சுய வெளிபாட்டிற்கான தியானங்கள், நேர்மறை உறுதிப்படுத்தல்களின் நுட்பங்களும் அடங்கியுள்ளது.
Only 1 left in stock
-
பணம்சார் உளவியல் | The Psychology of Money
”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
Only 1 left in stock
-
பிரார்த்தனை எனும் சக்தி
Murphy, author of The Power of Your Subconscious Mind, wrote this book to explain to readers how they could attain the source of their good and to get desired results through proper prayer. It is a manual on how to pray, how to maintain prayer as part of everyday activity, how to use prayer in case of emergency or danger, etc. According to Murphy, prayer is an ever present help in time of trouble, but you do not have to wait for trouble to make prayer an integral and constructive part of your life.
Only 1 left in stock
-
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள
“நேர்மறச் சிந்தனையின் வியத்தகு சக்தி”Out of stock
-
தன்மீட்சி
இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.
திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.
இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.
திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.
தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.
RM20.00Out of stock