Showing all 20 results

 • அஞ்சலை

  இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.

  RM35.00
 • அமீலா

  இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி “அமீலா”. சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து ‘கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது’ – என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ‘ஆழ்மனதில் அலைக்கழியுங்கள். மேல் முடியை கலைத்துவிடுங்கள்’ – என்று கதையெழுதியவர்களுக்கு விபூதி அடிக்கிறார்கள். கதைகள் பரிசோதனைக்குழாய் தவளைகள் போல விழிபிதுங்கிவிடுகின்றன. ஆனால் “அமீலா” காட்டுத்தீயினால் எழுந்தோடிய கங்காருக்கூட்டத்தைப்போல என்னுள் விழுந்து சிறு சிறு பொறிகள் ஏற்படுத்திய எழுத்தின் இயற்கையான இடப்பெயர்வுகள். அவைதான் இந்தத்தொகுப்பில் கதைகளாக வெளிவந்திருக்கின்றன.

  RM13.00
 • அனல் காற்று

  அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட்டும் உறவுகள்.

  இது காமத்தின் அனல் காற்று. அது குளிர்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடிகொடிகளுடன் நகரையே கொளுத்திவிடும் என எண்ணச்செய்கிறது.

  RM16.00
 • ஆட்டம்

  புறத்தின் ஆட்டவிதிகளுக்கு அடங்காத பேயாட்டம் அகத்தில், அந்த மோகப் பெருநெருப்பும் தணிந்து அகல் சுடராகிக் கனியும் கருணையொளி.

  RM9.00
 • ஆழி சூழ் உலகு

  கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று.

  RM55.00
 • இரவு

  பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.

  RM22.00
 • இன்றைய காந்தி

  காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது.

  RM49.00
 • காடு

  அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது.

  RM49.00
 • காவல் கோட்டம்

  ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது,அரசியல்,சமூகவியல்,இன வரைவியல் கண்ணோடங்களுடன்,அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும்,திரும்பி பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது. இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்.

  RM82.80
 • கொங்குதேர் வாழ்க்கை 2

  ழின் சிறந்த நவீன கவிதைகளின் தொகுப்பு இது. பாரதியார் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் கவிஞர்கள் குறித்த குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

  RM118.80
 • கொற்றவை

  “கொற்றவை’ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது.

  RM65.00
 • சூடிய பூ சூடற்க

  உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.

  RM15.00
 • திசையெல்லாம் நெருஞ்சி

  மொத்தமாக மூன்று கதைகள். மூன்றும் இன்றைய எதார்த்தத்தை அழகாக பதிவுசெய்வதால் நூல் இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து திடீர் நகரவாசியான மணமகனின் மனவோட்டத்தில் நகரும் “உருமால் கட்டு” கதை மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. மற்றோன்று “இரட்சணியம்” – பதின்மவயது விடலை பையனின் குழப்பங்களைப் பதிவு செய்வதாகவும், “திசையெல்லாம் நெருஞ்சி”- எங்கும் களையாக மண்டிக்கிடக்கும் சாதியகட்டுமானத்தை உடைத்து காட்டுவதாகவும் இருக்கிறது.

  வாசர்களை அயற்சியடையச் செய்யாத எளிமையான எதார்த்த நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை. வாய்பிருந்தால் வாசியுங்கள்.

  RM8.00
 • நிலம் எனும் நல்லாள்

  நிலம் எனும் நல்லாள்

  ‘ஆற்றங்கரையின் மரமும் அரசறிய

  வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே – ஏற்றம்

  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

  பழுதுண்டு வேறோர் பணிக்கு’

  RM16.00
 • நுண்வெளி கிரகணங்கள்

  நுண்வெளி கிரகணங்கள் மடியில் இருந்து எழுந்த ஒரு படைப்பாளி சொல்லும் கதை.

  நாவலின் மிகப்பெரிய பலம் அது கட்டமைக்கும் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த புற உலகம். விவசாய குடும்பம் என்ற ஒற்றை வரியிலோ நெல் அம்பாரமாகக் குவிகிறது என்ற வகையிலான மேம்போக்கான சூழல் விவரணைகளிலோ நின்று விடாமல் மிளகாய் காய வைப்பதில் இருந்து மடை அடைப்பது வரை மிக நுணுக்கமான தகவல்கள் வழியாக கட்டமைக்கப்பட்டிருப்பதும் சூழலை அறிவதன் வழியாக மட்டுமே படைப்பினை முழுதாக உள்வாங்க முடியும் என்ற தேவையை ஏற்படுத்தாமல் மிக நேர்த்தியாக அச்சூழலுக்குள் வாசகனை ஆசிரியரின் மொழி உள்ளிழுத்து விடுவதும் இப்படைப்பின் ஓட்டத்தில் மிக எளிதாக ஒன்றி விடச்செய்கின்றன.  இருபதாம் நூற்றாண்டின் இறுதியை கதைக்களமாக கொண்டுள்ள இந்த நாவல் விவசாயமும் விளைபொருட்களும் ஒரு பன்னாட்டு வியாபாரமாக மாறி வரும் சூழலையும் நிலத்தடி நீர் குறைவதையும் விவாசயத்தை விட்டு மெல்ல ஒரு தலைமுறை வெளியேறுவதையும் சித்தரிக்கத் தவறவில்லை.

  RM40.00
 • பால்கனிகள்

  இயற்கை உயிர்களுக்கு இட்ட ஒரே கட்டளை – உன் இனம் பெருகச் செய்

   

  திருநங்கைகள் குறித்த இரு எதிரெதிர் துருவங்களினாலான சிந்தனைகளே நம்மிடமிருக்கின்றன. ஒரு சாரார் அவர்களைக் கண்டு அஞ்சுவதாகவும் மற்றொரு சாரார் அவர்களிடத்தே பரிதாபப்படுபவர்களாகவும். ஒரு புறம் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியர்கள் என்பதாகவும் இன்னொருபுறம் அவர்களும் நம்மைப்போல உணர்ச்சியுள்ள ஜீவன்கள் என்பதாகவும். இந்த இரு எண்ணமுமே – அவர்களுக்கு ஆதரவானதாகவும் அல்லது எதிரானதாகவும் – மூன்றாம் பாலினத்தவரை அவர்கள் வேறொரு வஸ்து என்று பார்ப்பது போல தான். இந்த இரண்டுமே அவர்களின் விருப்பத்திற்கு எதிரானதாகவே இருக்க முடியும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஏதோ ஒன்றை எதிர்கொள்வதுதான் ஒரே வழியாக இருக்கிறது. சு.வேணுகோபால் ஒரு சார்பு நிலை எடுக்கிறார். அது, மூன்றாம் பாலினத்தவரின் மீது அன்பைப் பொழிவதாக, அனுதாபப்படுவதாக, இரக்கம் காட்டுவதாக இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்காக அதற்கு எதிர் நிலையிலிருக்கும் பாத்திரங்களை வார்க்கிறார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிட்ணனுக்கு எதிராக செயல்படும் போது, ‘இல்லை இல்லை அது அப்படி அல்ல’ என்று சொல்வதாக கிட்ணனின் குரலும், கதைசொல்லியின் குரலும், ஆங்காங்கே சு.வேணுகோபாலின் குரலும் ஒலிக்கிறது.

  RM13.00
 • வெண்ணிலை

  தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

  ‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன (-ஜெயமோகன்).

  சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டவை இக்கதைகள். வாழ்க்கையின் கொதிநிலைத்தருணங்களை விரிவான சித்தரிப்புகளுடன் உளவியல் நுட்பத்துடன் விவரிக்கின்றன. பேரிலக்கியவாதிகளிடமிருந்தே மனோதத்துவ அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களுக்கான மூலவிதையைப் பெறுகிறார்கள். உளவியல் வகைப்படுத்த இயலாது திகைத்து நிற்கும் புதிர்களிலிருந்தே தனது இலக்கியப் பயணத்தை தொடங்குவதை இயல்பாக்க் கொண்டிருக்கிறார் வேணுகோபால்.

  RM25.00