-
அ. முத்துலிங்கம்-சிறுகதைகள்(2-பாகங்கள்)
ஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு :
1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.
-
-
அப்பாவின் வேஷ்டி
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்
-
ஆ.மாதவன் கதைகள்
ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்…
அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேசி போல தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை
-
-
இவர்கள் இருந்தார்கள்
பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக்கோரியபோது அந்த மரபை நானும் கொண்டுசெல்லலாம் என நினைத்தேன். என் நினைவில் நீங்காதிருந்த சில ஆளுமைகளைப்பற்றி எழுத ஆரம்பித்தேன் இக்கட்டுரைகளில் பல முன்பே எழுதப்பட்டவை. சிலவற்றை மாற்றி எழுதினேன். சில கட்டுரைகள் புதியவை. இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இவை இவ் வடிவில் வந்திருக்காது அதற்காக திரு ராவ் அவர்களுக்கு நன்றி.
-
உச்ச வழு
எழுத்தாளர் ஜெயமோகன் சென்ற இரண்டாண்டுகளில் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம்.
‘இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன’.
RM20.00 -
கடல்புரத்தில்
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.
-
கம்பா நதி
‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ஓடியதோ ஓடவில்லையோ, இப்போது அதற்கான குட்டி மைய மண்டபம் மட்டும் இருக்கிறது. மண்டபத்தின் கீழே ‘கசங் கணக்காகத் தண்ணீர்’ கிடக்கிறது. இதுதான் நாவலின் பரிமாணமாக விரிகிறது. இந்நாவலுக்குள் ஏராளமான மனுஷர்களும் மனுஷிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். நதியின் அலைவீச்சு தன்னுள் மிதக்கும் பலவற்றையும் கரையோரத்தில் ஒதுக்குவதைப்போல இவர்களும் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் நதியில் மிதந்து வந்ததற்கான பலாபலன்களை நம் மனத்துக்குள் நுழைத்துவிடுவதில் இந்த எழுத்து புரியும் மாயம் அற்புதமானது. சாதாரண மனிதர்களின் இருப்பையும் அவர்களின் தேடலையும் ஆசை அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் தோல்விகளையும் வரலாற்றில் நிறுத்திவிட முடியுமென இந்த நாவல் நம்முன்னே கல்லெழுத்தாகப் பதிய வைக்கிறது. நம் சமூகத்தின் பெண்ணினம் இந்த நவீன யுகத்திலும் எதிர்கொள்கிற காவியச் சோகம் நாவலினூடே வெளிப்பட்டு நம்மை உலுக்குகிறது.
-
கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள், முதல் வாசிப்பிலேயே நாமும் இந்தப் படைப்பில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம் அல்லது இந்தக் கதைகள் முழுக்க நாம்தான் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. அடிமனதில் உறைந்துவிட்ட பழைய பாடல்கள் போல, நம்மை விடாது தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கதைகளின் கலைத்தன்மை செய்நேர்த்தியால் வந்ததன்று, உண்மையின் தரிசனத்தால் வந்தது!
– பாரதிபாலன்
-
கன்னியாகுமரி
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட , இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. அ\எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.
-
கிருஷ்ணப் பருந்து
கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத் தூண்டிற்று. இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள் இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். வெறும் புறத்தை மட்டுமின்றி, இந்தச் சங்கமத்தின் ஆழங்களைச் சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.
– தி. ஜானகிராமன்
-
கோபிகிருஷ்ணன் படைப்புகள்
கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.
-
சங்கச்சித்திரங்கள்
சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது … எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்.
RM22.00 -
சொல்லிமுடியாதவை
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
By the same Author -
துளிக் கனவு
என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது ஆகவே ஒரு புன்னகையாக ஒரு மெல்லிய துயராக ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வனவற்றை கதையாக ஆக்க நான் முயல்வதில்லை அவை வரும்வகையில் அப்படியே எழுதி கடந்துவிடுகிறேன் ஆனால் பின்னால் திரும்பிப்பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிரேன் அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன் அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறுகதைகள்.
-
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
முன்னுரை
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
-
நள்ளிரவில் சூரியன்
ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்விதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனக்கென்றே அந்தச் சூழல் ஏற்பட்டதோ என்ற ஆனந்தத்தில் நான் இருந்தேன். ஏனென்றால், எனக்கு உகந்த எழுத்துப் பாணியாக அவை இருந்தன. மையமற்ற கதை; புதுமையான உத்தி; மாறிய எழுத்துமுறை இவற்றை வெளிப்படுத்த தவித்துக்கொண்டிருந்த எனக்கு, ஏற்ற சூழல் அமைந்தது. இந்தச் சூழல் என்னும் முரட்டுக்குதிரையில், ஆனந்தமாகவும் லாகவமாகவும் நான் சவாரி செய்தேன் என்றே நினைக்கிறேன். – சுரேஷ்குமார இந்திரஜித்
-
-
பனி மனிதன்
பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.