Showing 21–40 of 141 results

  • ஹரிலால்

    “மூன்று முக்கியத்தரப்புகள் நாவலில் உள்ளன. ஒன்று காந்தியடிகளின் தரப்பு. பொதுவாழ்வில் தனிவாழ்வின் சிறப்பைக் கண்டுணரும் பார்வையைக் கொண்ட காந்தியடிகள் தன் மகனை பொதுவாழ்வை நோக்கிச் செலுத்த விழைந்து, அம்முயற்சியில் தோல்வியடைகிறார். இன்னொன்று கஸ்தூர் பா தரப்பு. மகனுடைய வெற்றியையும் வளர்ச்சியையும் உள்ளூர விழைபவராகவும் அதற்காக கணவரிடம் உரையாடுபவராகவும் காணப்படுகிறார். தன் முயற்சிகளில் அவருக்கும் தோல்வியே கிடைக்கிறது. ஹரிலால் மூன்றாவது தரப்பு. இளைய காந்தி என பட்டப்பெயர் சூட்டி மற்றவர்கள் அழைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சி அடையும் அவர் மீண்டும் மீண்டும் சிறைக்குச் செல்வதன் வழியாக எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு அவரால் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியாதவராக தடுமாறுகிறார். தன் தந்தை வகுத்தளிக்கும் வழியின் மீது அவநம்பிக்கையுற்று தனக்கு முன்னேற்றமளிக்கும் வேறொரு வழியை நாடி குடும்பத்துடன் முரண்கொள்கிறார் ஹரிலால். சில ஆண்டுகளுக்கு முன்பாக சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘சுதந்திர தாகம்’ என்ற நாவலை எழுதினார். அதில் காந்தியடிகளைப்பற்றிய பல தகவல்களை, பாத்திரங்களுடைய உரையாடல்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். இப்போது, காந்தியடிகளையே ஒரு முக்கியமான கதைப்பாத்திரமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறப்பான தமிழ் நாவல் வரிசையில் கலைச்செல்வியின் இந்நாவலுக்கும் இடமுண்டு.”

    RM30.00
  • கதீட்ரல்

    பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்னிருக்கும் மறைமுகமான அதிகாரம், அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது. தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி, பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க, தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு, தனது பால்ய கனவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு, பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள், முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறாள்.

    RM22.00
  • நட்சத்திரவாசிகள்

    புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது அதன் கருதுகோள்கள் , சரிநிலைகள் , பண்பாடு , பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும் எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது

    RM29.00
  • வௌவால் தேசம்

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது. ஆண்டுக்கு ஆறு மாசம் தண்ணீர் மீதி ஆறு மாசம் வறண்டு கிடந்த தாமிரவருணி, எப்படி வற்றாத ஜீவநதியாகப் பிரவாகித்தது என்பதை அறிகிற போது நாம் ஆச்சரியத்தால் உறைந்து போகிறோம். புனைவுகளாலும் படிமங்களாலும் வரலாற்றை அடுக்காமல், குவிக்காமல் கச்சிதமாக நெய்திருக்கிறார் நூலாசிரியர். வரலாற்றின் நரம்புகளை மீட்டும் போது நிறைய இடங்களில் ஆன்மிகத்தின் ஒலியே கேட்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் எதிர்மறைக் குணங்களை வௌவாலின் குணங்களுக்கு ஒப்புமைப்படுத்தி, வௌவால் தேசத்தை உருவாக்கி, அதில் நம்மையும் ஒரு அங்கமாக்கிவிடுகிறார். பல ஜமீன்தார்களை, வீரர்களை வேட்டையாடிய பிரிட்டிஷ் ராணுவத்தின் மேஜர் ஜெனரல், வௌவால் தேசத்தில் ஒரு வௌவாலாகப் பறந்து திரிகிறார். மனிதனை ஒரே இரவில் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் செய்த ஒரு பிரெஞ்சு எழுத்தாளனைப் போல, சோ. தர்மன் மனிதனை வௌவாலாகவும் வௌவாலை மனிதனாகவும் உருமாற்றி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். இதன்மூலம் வௌவால் தேசத்திற்குள் நுழையும் நாம் ஒவ்வொருவரையும் பெரும் சிரிப்பில் ஆழ்த்தி வேறொரு உயிப்பிராணியாக உருமாற்றுகிறது இந்த நாவல்.

    RM32.00
  • இப்போது உயிரோடிருக்கிறேன்

    25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் – வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல – பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள – உத்தியும் சவாலானதுதான் – இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.

    RM34.50
  • எண்கோண மனிதன்

    நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் – தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்; அல்லது நிசப்தம் போட்ட சப்தம் என்பதுபோன்ற கவிக்கிறுக்கு என்பதெல்லாம் சரிதான். என்றாலும், எத்தனை நூற்றாண்டுப் பழைய வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் மானசீகத்தில் எவ்வளவு தீர்க்கமாக மீட்டுருவாக்க முடிந்திருந்திருக்கிறது அவர்களால். அவற்றில் ஒரு தர்க்கத் தொடர்ச்சியை நிறுவிக்காட்டவும் முடிந்திருக்கிறது… வரலாற்றுத் தொடர்ச்சியைக் கட்டமைக்கும்போது, அவர்களுக்குப் புராதன நாட்களிலும், சமகாலத்திலும் ஒரே சமயத்தில் காலூன்றி நிற்க வாய்த்திருக்கும்தானே…. – நாவலிலிருந்து

    RM30.00
  • கபடவேடதாரி

    ‘முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.’ – மோகன் சுவாமிநாதன் ‘Amazing Socio-Political satire.’ – கார்த்திக் ‘மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.’ – ராஜா செல்வராஜ் ‘கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா.’ – ராஜேஸ்வரன் ராமமூர்த்தி ”வித்தியாசமான எழுத்து. வித்தியாசமான சிந்தனை. வித்தியாசமான நடை. தமிழின் ஜார்ஜ் ஆர்வெல். Excellent.’ – இந்துமதி ‘மன வக்கிரம் உள்ள ஒரு கிறுக்குப் பிடித்த பைத்தியக்காரன் எழுதிய கதை’ – ரவிச்சந்திரன் ‘முழுதும் ஃபேஸ்புக்குக்குள் நடக்கும் கதை. அங்குள்ள fake idகள், அவரவர் அரசியல் சார்பு, முட்டல் மோதல்கள், ஆஃபாயில் ஐடியாலஜிகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் நாவல்.’ – சித்ரா கோகுலகிருஷ்ணன்.

    RM53.00
  • பின்தொடரும் நிழலின் குரல்

    பின்தொடரும் நிழலின் குரல்

    சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தகைய எழுச்சி வீழ்ச்சியினாலானதே வரலாறு. இந்நாவல் மானுட அறத்தின் அடிப்படைகளைத் குறித்த ஒரு தேடல்

    RM90.00
  • கன்னிநிலம்

    நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான். இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை. – ஜெயமோகன்

    RM20.00
  • வெள்ளை யானை

    மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.

    RM50.00
  • கன்னியாகுமரி

    இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட , இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. அ\எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.

    RM19.00
  • பனி மனிதன்

    பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.

    RM25.00
  • சிகண்டி

    திருநங்கைகள் வாழும் இருள் உலகினை களமாக கொண்டு புனையப்பட்ட நாவல் சிகண்டி. கொலை, கொள்ளை, தற்கொலைகள் என மரணங்கள் மலிந்து உள்ள நிலத்தில் அன்பின் பொருட்டு வாழும் மனிதர்களையும் அந்த அன்பை சுயநலத்திற்காக சூதாடும் மனிதர்களை அலைய விட்டுள்ளார் ஆசிரியர். பல வாசகர்களால் அண்மையில் வந்த நாவல்களில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுப்பது எனப் பாரட்டப்பட்டது சிகண்டி

    RM50.00
  • ஒளிர்நிழல்

    நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட ஒருவன், அத்தடுமாற்றங்களின் சுவடற்ற ஒருவனின் முன் நாவலுக்குள் திகைத்து நிற்பதை, நாவலுக்கு வெளியே நின்று பதைப்புடன் பார்த்து நிற்கிறான் மற்றொருவன். அவர்கள் அத்தனை பேரின் வழியாக உருவாகி வரும் ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் வழியாக அச்சூழலில் வாசகனையும் பங்குபெற வைக்கிறது இந்தப் படைப்பு. அனைத்தும் கலந்து புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் உள்ள வெளி மறையும்போது நாவல் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. ஒளிர்நிழல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதெனச் சொல்ல முடியவில்லை. முற்றுப்பெற விரும்பாத பல பகுதிகள் வாசிப்பவரின் கற்பனைக்கென ஏங்கி நிற்கின்றன. நாவலுக்குள் எழுதப்படாமல் விடப்பட்டிருக்கும் எண்ணற்ற அத்தியாயங்களை, இதை வாசிக்கிற ஒவ்வொரு மனமும் தன்னுள்ளே கண்டுகொள்ளும் என்பது மட்டுமே எழுதப்படாத அத்தியாயங்களுக்கான நியாயமாக இருக்க முடியும். நவீன காலத்தை நோக்கி உத்வேகத்துடன் நகர்ந்து வருபவர்களின் அறம் பற்றிய மதிப்பீடுகளையும், மாற்றங்களின் முன் திகைத்து நிற்பவர்களின் இயலாமைகளையும் விசாரிக்க முயல்கிறது இப்படைப்பு. நம் சாதிய அடுக்குகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பொதுச் சித்திரத்தைக் கலைப்பதன் வழியாக தலித் என்ற சொல்லுக்கு ஒரு மறுவரையறையைக் கோருகிறது.

    RM15.00
  • சொல்கதை, நிகழ்கதை, படிமக்தை, வரலாற்றுக் கதை , கதையில் மூழ்கும் கோணங்கியின் அதிகதைகளாலான நாவல்- ஆயிரம் பக்கங்களில், நேர்த்திமிகு அச்சில்.

    த நாவலைத் திறக்கிறீர்கள். பென்சில் கோடுகளால் புனைவு உடலை வரைந்து அதன் குறுக்குவெட்டுப் பாதைகளில் பயணிக்கிறீர்கள். நிச்சலனமான வாசிப்புக்குத் தயாராகிறீர்கள். எழுதுதல்தான் நாவல். மொழிக்கு வெளியில் த நாவல் இல்லை. எனவேதான் த நாவலின் மொழிப்பரப்பில் இன்றைய நவீன வாசகனாக நாவலின் பதினாறு காற்றுகளை சுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தெரிந்துவிடும் பிரதியும் ஒரு புனைவுதான் என்று. புனைவின் மூலகங்களை கனவுகளாகவும் அடைந்துள்ளது த நாவல். எதிர் நாவலுக்கான காகிதங்களும் அடித்துத் திருத்திய கச்சாவான குறிப்புகளும் வாசகனின் புனைவுக்கான பிறை வடிவ நுழைவு வாயில்களாக உள்ளன.

    ஒவ்வொரு பிறையும் வட்டமான ஏரியில் வீழ்ந்ததும் பக்கத்தை திருப்புகிறீர்கள். அசைவற்ற நீர் மைய அலைகளில் வாசிப்பு தொடர்கிறது. த நாவலின் பக்கங்களுக்கு வெளிப்புறம் உள்ளே புரளும் காகித அடுக்கில் பார்வைத்தளம் உள்ளது. நாவலின் மையம் எப்போதும் த-க்களின் நூலாக உட்பரப்பினுள் மீன்கள் நீரேற்றத்தில் தவழ்ந்து உள்படர்கின்றன. உலகின் நீராகவும் நாவலின் அலையடுக்கில் கடந்து ஏறும் மீனாகிறீர்கள்.

    அடிப்படையற்ற இருப்பில் விடுதியின் விளக்கொளியில் நாவல்களாக மாறும் நாவலாக எழுதப்பட்ட கோடுகளில் நுழைந்து வரும் கதாபாத்திரங்கள் பிரதான இடத்துக்கு வருகிறார்கள். இவர்கள்தான் நிராகரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள். தனுஷ்கோடி ஓவியத்திலிருந்து விரல்களை எடுக்கமுடியாது என்னால். முதலில் அபூர்வமானதாகவும் பிறகு உப்பு விடுதியின் தனிமையாகவும் உப்புக்காற்று நூலகத்தில் இசை மாறு உண்டாவதை கானல் வரிகளில் காண்கிறீர்கள். நாவல் இயற்றும் மூத்தமொழியின் பாய்மரத்தில் வாசித்தவாறு கமாரா வாசிகளைச் சந்திக்கிறீர்கள்.

    RM76.00
  • பிதிரா

    சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் மெல்ல நிலவு தூங்கிக் கொள்கிறது. புனைவுகள் நடமாடும் சோக இழை. கோகின் கலைந்த வெள்ளையுடல் காலனியக் கோரத்துடன் கடலில் கிடந்தது. நிலவு மயங்கினால் உயிர்பெறக்கூடிய பிதிராவின் சாமகால தறிகள் ஊர் உருவத்தை வேறொன்றாக நெய்து காட்டும். ஓசையில் நகர்ந்து கொண்டே இருக்கும் சுண்ணாம்பு ஊரின் நீர்ச்சுனை அடியில் உவர்மகள் இலந்த்ரா விரல் வைத்துத் துயில்கிறாள் மண்குடத்துடன். பாறையின் நிழலில் குளிர்ந்த எறும்பு மண் புற்றில் மேலே, கீழே ஓடும் பிதிராவின் கால்களின் ஒளிர்வு. பிதிரா ஒரு கதாபீடிகை. ஆலமரத்தடியில் பிதிரா வாசித்தால் ஒவ்வொரு பிரதியில் ஒளிந்திருக்கும் குணங்களைப் பொறுத்து நிழல்கள் மாறுபடும். அவரவர் சிற்பிக்க உளிகளால் குடைந்து செதுக்கி செதுக்கி இருட்டும் வெளிச்சமும் பாய்ச்சி இப்பிரதியில் புதைந்து கிடக்கும் பிதிராவை திறப்பதற்குமுன் கல்வாசல் வழி நுழைவதற்குள், வேறு சிலர் வேறுபடும் உருவத்தில் திறந்துவிடப் போகிறார்கள். வாசனை தரும் ஒளி வீசியது.

    RM43.00
  • எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

    இந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன் வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற நாவல்களையும் சேர்த்தே சொல்கிறேன். அந்த வகையில் இந்த நாவல் தனித்தன்மை கொண்டது. -சாரு நிவேதிதா

    RM23.00