Showing 81–100 of 141 results

  • கசார்களின் அகராதி

     

    1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளில் நிகழும் மூன்று கதைச்சரடுகள். வெவ்வேறு காலங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள். நூற்றாண்டுகளைக் கடந்து பின்னால் சென்று பாதிப்பை நிகழ்த்தும் சம்பவங்கள் என சிறிய விஷயங்களைக்கூட வாசகன் தவறவிட்டு விடக்கூடாது என்ற அளவில் மிகக்கவனமாகப் பின்னப்பட்ட ஒரு வலை. வாசகனது முழுமையான கவனத்தைக் கோருகின்ற படைப்பு. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்விடங்கள் மூன்று புத்தகத்திலும் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகின்றன. ஆனால் மூன்று புத்தகங்களும் அவற்றிலுள்ள நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி என்ற இரு பிரதிகள் கொண்டது. ஆண் பிரதிக்கும் பெண் பிரதிக்குமான வித்தியாசம் மிக முக்கியமான ஒரு பத்தி மட்டுமே. ஆண் தன்மையுடைய கதைகளுக்கும் பெண் தன்மையுடையனவற்றுக்கும் ஒரேமாதிரியான முடிவு சாத்தியமில்லை என்றார். இந்நாவல் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு

    வரை காஸ்பியன் கடலருகே வாழ்ந்த கசார்கள் என்ற தனித்துவம் வாய்ந்த ஓர் இனக்குழு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அல்லது யூதப் பெருமதங்களால் உள்ளிழுக்கப்பட்டு வரலாற்றில் தடமின்றி மறைந்துபோனதை விளக்குகிறது. தங்களுக்கென வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், வழிபாடு என உயிர்ப்பான மிகநீண்ட வரலாற்றை, பண்பாட்டைக் கொண்ட இனக்குழுவொன்று, அதற்குப் பலநூற்றாண்டுகள் பின்னால் உருவான ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது, மாற்றத்தில் ஈடுபடும் மதங்கள் அவற்றின் விழுமியங்களைத் தவறான ஒன்றென, கைவிடவேண்டியதென எப்படி நம்பவைக்கின்றன என்பதை பாவிச் இந்நாவலில் விளக்குகிறார். இதனூடாக மும்மதங்களின் நம்பிக்கைகள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் முரண்கள், யுகோஸ்லாவிய – செர்பியத் தொன்மங்கள், தொல்கதைகள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார். நாவலைப் படிக்கும்போது வாசகன் அனைத்து நிலங்களது தொல்குடிகளின் இன்றைய நிலையோடும் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரை வாசித்திராத புதிய நிலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றை சுவாரசியமான கட்டமைப்பின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பு இப்படைப்பின்வழி வாசகனுக்குக் கிடைக்கும். நல்ல புனைவெழுத்து ஒன்றில் புனைவு எந்தப்புள்ளியில் துவங்குகிறது என்பதை உங்களால் பிரித்தறிய முடியாது. அப்படியான படைப்புதான் இது. மேலும் ஒரு நிலத்தின் அரசியல் வரலாற்றை ஒட்டிய புனைவை உருவாக்க விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு பாவிச் அதன் பல்வகைச் சாத்தியங்களை இப்படைப்பின் மூலம் உணர்த்துகிறார்.

    RM50.00
  • ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்

    நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் – ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார். ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார், தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள், போருக்குப்பின் இரக்கமற்ற, நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது, தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட, பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என. உண்மையில் இது கார்லோஸ் புயந்தஸ்சின் ஆகச்சிறந்த படைப்பு, ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ இன்றைய மெக்சிகோவுக்குள் நிகழும் ஓர் உயிரோட்டமுள்ள பயணம்.

    “மிகுந்த கற்பனையாற்றலும் மிகுந்த திறனும் கொண்ட நாவல். ஒரு மனிதனின் வாழ்க்கை மூலமாக நவீன மெக்சிகோவின் வரலாற்றைக் கூறிச்செல்கிறது… இந்தப் புத்தகத்தின் அமைப்புநயம், கட்டமைவு, மனோவியல் மற்றும் விவரிப்பின் வளமையைக் கண்டு திகைப்படைந்தேன்.”

    – ஸ்டீபன் ஹ்யூ-ஜோன்ஸ். (நியூ ஸ்டேட்ஸ்மென்).

    RM38.00
  • பேய்ச்சி 

    வரலாற்றை ஒரு கையாலும் தனிமனித உளப்பரிணாமங்களை இன்னொரு கையாலும் முடைபவனே மிகச்சிறந்த நாவலாசிரியன்.செயற்கையான உத்திகள் ஏதுமில்லாமல், இயல்பாக உருவாகிப் பெருகிச்செல்லும் மொழியால் அந்த பெருஞ்சித்திரத்தை நவீன் உருவாக்குகிறார். இன்னமும்கூட இந்நாவல் தமிழகத்தில் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அதற்கான வாசகர்களைக் கண்டடையும்போது தமிழில் ஒரு சாதனை என்றே கொள்ளப்படும். – ஜெயமோகன்

    (மலேசிய அரசாங்கத்தால் தடை செய்ப்பட்ட நாவல் எனவே இந்நூல் விற்பனைக்கு இல்லை)

    RM20.00
  • மிச்சமிருப்பவர்கள்

    பல தசாப்தாங்களாக அடக்குமுறைகள், உரிமை இழப்புகள், பாரபட்சங்கள், மத/கலாசார அழிப்பு ஆகிய கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் மலேசியத் தமிழ் இந்துக்கள் கோலாலம்பூரில் காந்தியின் சித்திரங்களையே பதாகைகளாக ஏந்தி அந்த நாளில் ஒன்று திரண்டு வந்தனர். அதனை மலேசிய அரசு கையாண்ட விதத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த எழுச்சியின் பின்னணியின் பதைபதைப்பு குறையாமல் அமைந்தது இந்நாவல் – ஜடாயு

    RM10.00
  • ரிங்கிட்

    ரிங்கிட் நாவலின் அடிநாதமே இனங்களுக்கிடையே இருக்கின்றே பதற்ற நிலையைப் பற்றி பேசுவதுதான். குறிப்பாக மலாய் மற்றும் சீன சமூகங்களுக்கிடையே நிலவுகின்ற பதற்றநிலை நாவலில் எல்லா நிலைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. – க.கங்காதுரை

    RM10.00
  • எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

    ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞு பாத்தும்மாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.

    RM12.50
  • வானம் வசப்படும்

    ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவார்ஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவரஸ்யமாக எனக்கு இருந்தது. நடந்ததைத் திருப்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள் அவர்களின் மொழி எனக்கு கை வந்திருக்கிறது ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாகிறது. -பிரபஞ்சன்

    RM50.00
  • காகித மலர்கள்

    சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)

    RM44.00
  • நிமித்தம்

    நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம். நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது. தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன. மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.

    RM40.50
  • மானுடம் வெல்லும்

    மானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் சுமார் முந்நூறு ஆண்டுகள் இருந்த இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தமிழ் வாழ்க்கையையும் பிரெஞ்சுக்-காரர்கள் மூலம் தமிழர் கற்றுக்-கொண்ட பிரெஞ்ச்-தமிழ் வாழ்க்கையையும் கலை நேர்த்தியுடன் படைத்தளிக்கிறது இந்நாவல். அக்காலத்திய பிரெஞ்ச்– -தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.

    RM32.00
  • வெக்கை

    ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி, இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு, தண்டனைச் சட்டம், சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. – இயக்குநர் வெற்றிமாறன்

    RM15.00
  • கொரில்லா

    ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள்.

    RM11.00
  • ம்

    ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்…அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை …

    RM17.00
  • இச்சா

    இச்சா(நாவல்) – ஷோபா சக்தி:

     

    “தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”

    RM29.00
  • பாக்ஸ்

    ‘கொரில்லா’, ம்’ நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.

    RM20.00
  • இரவு

    பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.

    RM22.00
  • கொற்றவை

    “கொற்றவை’ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது.

    RM65.00
  • அஞ்சலை

    இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.

    RM35.00