-
யாருக்கும் இல்லாத பாலை
RM11.00யாருக்கும் இல்லாத பாலை
“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப் புதைத்துவைத்திருக்கும் கவிதைகள் இவை. மென் உணர்வின் சுகந்தமும், தனிமையின் நெருடலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வலியும், வன்முறைக்கு எதிμõன குμலும் செறிவான படிமங்களின் ஊடாக இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன…”
In stock
-
அல் கிஸா
RM15.00அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.
Out of stock
-
-
விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்
RM25.00மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.
In stock
-
-
சிண்டாய்
RM18.00அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். அவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘சிண்டாய்’ வல்லினம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ‘வல்லினம்’ இணைய இதழில் ’நிலமும் துயரமும் மனிதர்களும்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையிலிருந்து சில பத்திகள்…. /இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது./
In stock
-
கூளமாதாரி
RM39.00மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
Out of stock
-
மாதொருபாகன்
RM24.00இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கிழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது… இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும். – “மாதொருபாகன்” வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து
Out of stock
-
போண்டு
RM22.00மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை
Only 1 left in stock
-
நெடுநேரம்
RM39.00பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.
Only 2 left in stock
-
கெட்ட வார்த்தை பேசுவோம்
RM23.00சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. ஆ. இரா. வேங்கடாசலபதி
Only 1 left in stock
-
கங்கணம்
RM43.00இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திரிகின்றனர். அவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. காதல் உணர்வும் உடலை அறிதலும் உயிர்களுக்குப் பருவத்தில் வாய்க்க வேண்டியவை. அவை வாய்க்காமல் தடுக்கும் எதுவும் இயற்கைக்கு எதிரான சக்திதான். அவ்வகையில் இயற்கை சார்ந்த போராட்டம் ஒன்று இந்நாவலுக்குள் நிகழ்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல நேரும் தடைகளும் அவற்றை எதிர்கொள்ளும்போதான மனநிலைகளும் இதனுள் விரிகின்றன.
Out of stock
-
ஆலவாயன்
RM24.00‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது. நிலம் சார்ந்த வாழ்வு உழைப்பினால் அர்த்தப்படுவதைச் செயல்களைப் பிடிக்கும் சொற்கள் வழியாகவும் எளிமையும் அடர்த்தியுமான தொடர்களைக் கொண்டும் இந்நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது. வட்டார மொழி வாழ்வோடு பிணைந்துள்ள பாங்கை வெளிப்படுத்தும்போது வாசிப்புத்தன்மை கூடும் என்பதற்கான சான்று இந்நாவல்.
Out of stock
-
ஏறுவெயில்
RM28.00ஏறுவெயில்
1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.Only 2 left in stock




















