-
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் அலையும் கடலும்
கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை.
Out of stock
-
-
-
-
கடல்புரத்தில்..
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.
Out of stock
-
வெயிலின் கூட்டாளிகள் & பிற கதைகள்
வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க முடியாதவை. அலைகளைப் போல முடிவற்று நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில், முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதி செய்ய முயல்கின்றன இக்கதைகள்.
Out of stock
-
ஆள்தலும் அளத்தலும்
ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது. பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு. சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!
Out of stock
-
ரெயினீஸ் ஐயர் தெரு
தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது. – களந்தை பீர்முகம்மது
Out of stock
-
1984 (ஜார்ஜ் ஆர்வெல்)
ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார் ஜார்ஜ்.
Out of stock
-
-
தேவதையை தரிசித்த மனிதன்
அவன் சொன்னான், “நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவுக்கு முன் ஆந்த்ரேய் போன்ற ஒரு கலைஞன் என்ன செய்வான்? மனிதர்களின் உள்ளார்ந்த விருப்பங்கள் நிறைவேறும் அறை ஒன்றை கற்பனை செய்யலாம். சதுக்கத்தின் முன் நின்று அந்த அழிவை உரக்க அறிவித்துவிட்டு தன்னையே தீயிட்டு எரித்துக் கொள்ளலாம், குளத்தின் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு எரியும் மெழுகுவர்த்தியை அணையாமல் எடுத்துச் செல்லும் ஒரு சடங்கைச் செய்யலாம், புதிரான தன் வேலைக்காரியோடு படுக்கையை பகர்ந்துகொள்ளலாம். கடவுளிடம் சரணடைந்து தன் வீட்டை எரிக்கலாம். இறுதி நம்பிக்கையாக நோவாவின் கப்பல் போல ரயில் ஒன்றை வடிவமைக்கலாம்…”
Out of stock
-
-
கரைந்த நிழல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது. – சி. மணி (மார்ச் 1977இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பிலிருந்த பின்னுரையிலிருந்து)
Out of stock
-
கு. அழகிரிசாமி சிறுகதைகள்
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் கால வரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
Out of stock
-
-
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. – சுகுமாரன்
Out of stock
-
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.
Out of stock
-
குறத்தி முடுக்கு
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது.
Out of stock
-
பேரீச்சை
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக எழுதுகிறார். மரபான கதைசொல்லியின் லாவகமும் மொழியும் கொண்ட அனோஜன் கதைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.
Out of stock
-