Showing all 9 results

 • அம்புப் படுக்கை

  பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமென கதறவில்லை துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி இயன்றவரை ஒத்திப் போடுவதாக வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது இக்கதை மாந்தர்களைப் போல.

  RM15.00
 • ஓந்தி

  குமார் வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைக் கலாப்பூர்வமாகப் படைத்திருப்பது முக்கியமாகப் படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது தமிழ் சிறுகதை சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பை செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது.

   

  -சு.வேணுகோபால்.

  RM14.00
 • கதை சொல்லியின் 1001 இரவுகள்

  ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

  RM10.00
 • கையறு

  நான் இந்த நாவலை முதலில் வாசித்தபோது என்னைக் கவர்ந்த அம்சமே நினைவுச்சின்னம், இமயத்தியாகம், மரவள்ளிக்கிழங்கு என இதற்கு முன் இக்களத்தை ஒட்டி புனையப்பட்ட நாவல்களில் இல்லாத தனித்த வழித்தடத்தை இப்புனைவின் வழி கோ.புண்ணியவான் அமைத்துள்ளார் என்பதுதான். எழுத்தாளனின் கைரேகை என்பது அதுதான். அதுவே ஒரு புனைவை மறுவாசிப்புக்குத் தூண்டுகிறது. ஓர் அசாதாரண சூழலில், தானறியா நிலத்தில், கதாசிரியன் உருட்டிவிடும் கதாபாத்திரங்கள் மூலம் அவனே கண்டடையும் வாழ்க்கையில் திடுக்கிடும் உண்மைகளை கோ.புண்ணியவான் இந்த நாவலின் வழி அடைந்துள்ளார்.‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார். – ம.நவீன்

  RM40.00
 • ட்ரங்கு பெட்டிக் கதைகள்

   

  பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சிந்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவன், ஓவியங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சிலது மறுவுருப்பெற்று இருக்கின்றன.

  RM15.00
 • நீலகண்டம்

  நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.

  RM27.00
 • போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)

  போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் – பிரம்மராஜன்)

  மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட்,ஜாக் லண்டன்,புலோட்டினஸ்,ஆர்சன் வெல்ஸ்,ஃபிளாபர்,புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார்.மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர்.தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ்,இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.
  – -எலியட் வெய்ன்பர்கர்.

  RM55.00
 • விஷக் கிணறு

  அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து  கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் தேர்வு செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்குக் காரணமான சிக்கலைக் காட்டிலும் பூதாகரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்கக்கூடுமா? எத்தனைக் கேள்விகள்?

   

   

  விஷக்கிணறு அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.

  RM20.00