Showing all 9 results

  • என் தந்தை பாலய்யா

    மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக – பொருளாதார – கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்டதிட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள், பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சி ‘என் தந்தை பாலய்யா’. தீண்டத்தகாத ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சமூகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்கும் சாதிய முறைகளுக்கும் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் ஏளனப்படுத்தலுக்கும் அவமதிப்புக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் தனது நிதர்சனமாக அதை உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் இந்தப் புத்தகம் வெளிக்கொணர்கிறது.

    – எஸ்.ஆர்.சங்கரன் ஐ.ஏ.எஸ்

    RM32.50

    Out of stock

  • என் கதை

    என் கதை

    கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.

    சச்சிதானந்தன் (மலையாளக் கவிஞர்)

    RM19.00

    Out of stock

  • நான் பூலான்தேவி

    நான் பூலான்தேவி

    எனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை.எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்படுத்தப்பட்டவளுமான ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலரும் திட்டினார்கள், கேவலப்படுத்தினார்கள், பழித்தார்கள்…

    எங்கு பிறந்தவர்களாயினும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, தோலின் நிறம் அல்லது எப்படிப்பட்ட உருவம் கொண்டவர்களாய் இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தத்தான் நான் விரும்பினேன்.

    உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும் எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், குற்றவாளியாகவுமே பார்த்தது. நான் நல்லவள் என்று சொல்லவில்லை, ஆனால், நான் எப்பொழுதும் ஒரு குற்றவாளியாய் இருந்ததில்லை. மொத்தத்தில் நான் செய்ததெல்லாம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழி வாங்கினேன் என்பது தான்.

    -பூலான் தேவி

    RM32.00

    Out of stock

  • யதி : தத்துவத்தில் கனிதல்

    யதி : தத்துவத்தில் கனிதல் “நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது. ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது. அது கங்கையாகலாம். மந்தாகினியாக நடைபோடலாம். ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான். காதுகளை உடைக்கும் பேரோசை. பிறகு ரிஷிகேசம். நீர் மலினமடைகிறது. காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன. கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும். மறுகரை தெரியாது. அதன்மீது கப்பல்கள் நகரும். கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது. ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும். ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும். பனிப்பாறையின் அதே அமைதி. நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது. தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும். பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை. அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும். மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல. ஒரு பெரும் பொதுமை அது. காலாதீதமானது. தூலங்களில் மட்டும் ஈடுபட்டு ஆழ்ந்த அனுபவங்களை மறந்துபோன ஒரு தலைமுறையினர் நாம். துரியத்தின் தளத்தை நமது படைப்புலகில் நாம் அடைய முடியாது போகலாம்; காரணத்தின் தளத்தை தொடமுடியாது போகலாம்; குறைந்தபட்சம் பிரபஞ்ச சாரத்தின் ஒளி பரவிய கனவின் தளத்தையாவது தொட்டறிய முயல்வோம்.” ~ நித்ய சைதன்ய யதி

    RM55.00

    Out of stock

  • காட்டுப் பெருமாள்

    இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வாய்மொழி வரலாறு பெருமாளைப் பற்றிய ஒரு கண்ணோட்டமாகும். கம்யூனிச சித்தாந்த போராட்டவாதியான இவர், சுங்கை சிப்புட் தோட்டப்புறங்களில் மட்டுமல்லாமல், பொதுவாகவே தொழிலாளர் வர்கத்தின் தலை சிறந்த போராட்டவாதியாக திகழ்ந்தார்.

    RM20.00

    Out of stock

  • முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள்

    நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.

    RM16.00

    Out of stock

  • பாலைவனப் பூ

    நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.

    RM40.00

    Out of stock

  • சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை

    அ.ரெங்கசாமி அவர்களின் சுய வரலாறு அடங்கிய நூல்.

    RM20.00

    Only 1 left in stock

  • தனுஜா

    ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்.

    RM33.00

    Out of stock