Showing the single result

  • சிலுவைராஜ் சரித்திரம்

    தமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்.’ இந்த நாவலின் சொல்முறை, அதைக் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டே போகச் செய்கிறது.

    ஏழ்மையாலும் வேலையின்மையாலும் சாதிய முரண்களாலும் குரூரமாகத் துவைத்தெடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சிலுவைராஜ். வலிகளாலும் அவமானங்களாலும் நிரம்பிய அவனது கதை, நம்மிடம் அசலான குரலில் மிக அன்யோன்யமாகக் கூறப்படுகிறது.

    வாழ்வின் எல்லா நிகழ்வுகளையும் சாதிய, தத்துவ, அரசியல் வரலாற்றுடன் இணைத்து எழுதப்படுவதால், ஐம்பதுகளுக்குப் பிறகான ஒரு காலகட்டம் முழுவதையும் நாவல் உறிஞ்சிக் கொள்கிறது. கிராமத்தில் விளையாட்டுத்தனமாக வளரும் சிறுவன் சிலுவை, மிலிட்டரி தந்தையிடம் அடி வாங்குகிறான். பள்ளியிலும் அடி. ராக்கம்மாப் பாட்டியின் கதைகள் அவனை அணைத்துக்கொள்கின்றன. பால்யத்திலிருந்து விரியும் நாவல் பின்னால் வரும் வாழ்வு முழுவதையும் அதே பால்யத்தின் வெகுளித்தனத்துடனும் மாசடையாத மனசாட்சியுடனும் பரிசீலிக்கிறது. பின்காலனிய முரண்பாடுகளும் இருத்தலியல் நெருக்கடிகளும் மிகத் தீவிரமான அகத் தர்க்கங்களில் இறங்கி பகடியாக வெடிக்கின்றன.

    ஒடுக்கப்பட்ட மனிதர்களின் அலைக்கழிப்பை அனுபவங்களின் வழியாக எழுதிச் செல்வதன் மூலம் சிலுவை கூறுவதில் ஒரு தவறையும் காணமுடியவில்லை. சிலுவைராஜ் சாதாரண மனிதன் இல்லை; அவனது தேர்ந்த ரசனை, விரிந்த வாசிப்பு, தன்னெழுச்சியாய் எழும் கூர்மையான பார்வை, சதா துடிதுடிக்கும் மனசாட்சி போன்றவற்றால் நம் மனதில் ஆழப் பதிகிறான். இறுதியாக, ஒரு தேசத்தின் அதன் மனிதர்களின் அக வரலாறே நாவல் என்பது நிரூபணமாகிறது.

    RM51.00