Showing all 7 results

  • வரம்பு மீறிய பிரதிகள்

    வரம்பு மீறிய பிரதிகள்

    சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.

    RM30.00
  • லத்தீன் அமெரிக்க சினிமா

    “ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் ‘புதிய’ கதைகளையும் ‘புதிய’ உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.” புத்தகத்திலிருந்து…

    RM21.30
  • நிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை)

    “ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”

    நூலிலிருந்து…

    RM38.00
  • தாந்தேயின் சிறுத்தை

    கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.

    RM34.00
  • சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்

    சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.

    RM35.00
  • பழுப்பு நிறப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)

    என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். – சாரு நிவேதிதா

    RM110.00
  • கலகம் காதல் இசை

    என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை என்னி நான் பரவசமடைகிறேன். -மைக்கேல் ஜாக்ஸன்

    RM18.00