Showing 1–20 of 26 results

  • யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்

    யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் இக்கதைகளின் ஜிவத் துடிதுடிப்பு பழுதுறுவதில்லை. இந்தக் கதைகளின் மிக முக்கியமான அம்சம், வாசகனின் பரந்துபட்ட பார்வையை, அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவையாக இவை இருப்பதுதான். சமூகம், உளவியல், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இக்கதைகள் இயங்கினாலும் பூரணமான கலை அமைதியைப் பெற்றிருக்கின்றன். யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான 37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது.

    RM62.50
  • கன்னிநிலம்

    நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான். இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை. – ஜெயமோகன்

    RM20.00
  • இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

    இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 – ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.

    RM23.50
  • அபிப்பிராய சிந்தாமணி

    இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது

    RM90.00
  • புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

    என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது. புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது. – ஜெயமோகன்

    RM25.00
  • வாழ்விலே ஒரு முறை

    வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது. என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. “இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்” என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன். – ஜெயமோகன்

    RM18.00
  • ஒளிர்நிழல்

    நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட ஒருவன், அத்தடுமாற்றங்களின் சுவடற்ற ஒருவனின் முன் நாவலுக்குள் திகைத்து நிற்பதை, நாவலுக்கு வெளியே நின்று பதைப்புடன் பார்த்து நிற்கிறான் மற்றொருவன். அவர்கள் அத்தனை பேரின் வழியாக உருவாகி வரும் ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் வழியாக அச்சூழலில் வாசகனையும் பங்குபெற வைக்கிறது இந்தப் படைப்பு. அனைத்தும் கலந்து புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையில் உள்ள வெளி மறையும்போது நாவல் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. ஒளிர்நிழல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதெனச் சொல்ல முடியவில்லை. முற்றுப்பெற விரும்பாத பல பகுதிகள் வாசிப்பவரின் கற்பனைக்கென ஏங்கி நிற்கின்றன. நாவலுக்குள் எழுதப்படாமல் விடப்பட்டிருக்கும் எண்ணற்ற அத்தியாயங்களை, இதை வாசிக்கிற ஒவ்வொரு மனமும் தன்னுள்ளே கண்டுகொள்ளும் என்பது மட்டுமே எழுதப்படாத அத்தியாயங்களுக்கான நியாயமாக இருக்க முடியும். நவீன காலத்தை நோக்கி உத்வேகத்துடன் நகர்ந்து வருபவர்களின் அறம் பற்றிய மதிப்பீடுகளையும், மாற்றங்களின் முன் திகைத்து நிற்பவர்களின் இயலாமைகளையும் விசாரிக்க முயல்கிறது இப்படைப்பு. நம் சாதிய அடுக்குகள் குறித்து ஏற்பட்டிருக்கும் பொதுச் சித்திரத்தைக் கலைப்பதன் வழியாக தலித் என்ற சொல்லுக்கு ஒரு மறுவரையறையைக் கோருகிறது.

    RM15.00
  • ஊமைச்செந்நாய்

    அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன. 

    RM22.00RM24.50
  • ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை

    இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், 
    ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்.
                                                                                                   – ஜெயமோகன்

    RM19.00
  • நூறு நிலங்களின் மலை

    நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) – ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்.

    RM16.00
  • குகைகளின் வழியே

    குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) – ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர. இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.

    RM14.40RM16.00
  • இந்திய ஞானம் – தேடல்கள், புரிதல்கள்

    இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.

    RM31.50RM35.00
  • அருகர்களின் பாதை

    ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர்.

    RM28.00
  • புல்வெளி தேசம்

    நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது. – ஜெயமோகன்

    RM20.25RM22.50
  • முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள்

    நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.

    RM16.00
  • சொல்முகம்

    பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக் கொண்டு மேடையேறுவேன். எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது. – ஜெயமோகன்

    RM22.50
  • தனிக்குரல்

    தனிக்குரல்
    பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன்.
    எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.
    இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது.
    – ஜெயமோகன்

    RM25.00