Showing all 5 results

  • புத்தரின் வரலாறு

    புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்காட்சி பெற்று, நான்கு வாய்மைகளான துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்கம் நீக்கும்வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள் உண்மையான புகலிடத்தையடைகிறார்கள். இதை அடைந்தவர்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்

    RM7.00
  • பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)

    பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.

    RM75.00
  • மீசை என்பது வெறும் மயிர்

    மீசை என்பது வெறும் மயிர்

    பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது

    —— ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூ

    தடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருப்பது பொருத்தமானதொரு நடவடிக்கைதான்.

    ———– அலன் லாம்பர்ட், தி ஸ்பெக்டேடர்’ஸ் வாய்ஸ்

    மனிதகுலம் கூட்டாக அடைந்த முன்னோர்களின் மீது ஒரு குழு தனியுரிமை

    கொண்டாட்த் தொடங்கியதுமே வருந்த்தக்க வகையில் எல்லாமே மீண்டும் பூஜ்ய நிலைக்குச்

    சென்றுவிடும் என்கிற ஆபத்தை இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

    RM15.50
  • பட்டாளத்து வீடு

    செவ்வண்ண துண்டுப் பிரசுரத்தோடு அலையும் மனங்களுக்குள்ளும், அறிவை உரசிப் பார்த்துக்கொண்டேயிருக்கும் ஜீவராசிகளுக்குள்ளும் கனிந்து பெருகும் அன்பின் ஈரம் கசியும், எளிய மொழியிலான கதைகள் இவை. தேவதைகளெனவும் பேய்களெனவும் மட்டுமே பெரும்பாலும் கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள் அற்புத மானுடர்களாக அபூர்வமாய் மிளிர்கிறார்கள். உள்ளீடாய் இழையோடும் துயரத்திற்கு இணையாக பகடி போர்த்திய இக்கதைகளுக்குள், அரசியல், கலை – இவற்றில் எதன் கையைப் பற்றிக்கொண்டு செல்வதென்கிற குழப்பமின்றி, இரண்டின் கரங்களையும் நாம் பிடித்துக்கொள்கிறோம். இறுதியில் அவையிரண்டும் விடாது நம்மையும் பற்றிக்கொள்கின்றன.

    RM5.00