-
வங்காரியின் பசுமைத் தூதுவர்
சுற்றுச் சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர் ஆதி.வள்ளியப்பன். இந்த நூல் சுற்றிச்சூழல் தொடர்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும் எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும். இதை நிகழ்த்திக் காட்டியதற்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாயின் கதை இது, குழந்தைகளுக்காக….
-
நிறம் மாறிய காகம்
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்
-
அணிலின் துணிச்சல்
பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்.
-
-
நம்மைச் சுற்றி காட்டுயிர்
சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.