-
CHILDREN OF DARKNESS
மலேசியாவின் நான்கு நவீனத் தமிழ் இலக்கியவாதிகளின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்.
-
அக்கினி வளையங்கள்
மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
-
-
-
அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை
மலாய் நவீன இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகள் அடங்கிய நூல்.
-
இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்
கே.பாலமுருகனின் தேர்ந்தெடுத்த இக்கதைகள் அந்நியமாதல் சிக்கலை வலுவாகப் பேசும் புனைவுகள். தோட்டத்தில் இருந்து பெயர்ந்த உதிரி மனிதர்களின் வாழ்வை இக்கதைகள் பேசுகின்றன.
-
-
உச்சை
காலாகாலகாமாக இருந்துவரும் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான பிணைப்பையும், இந்தப் பிணைப்பினால் மனிதன் பெறும் உயிர்ப்பையும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லும் நவீனின் கதைகள் தொன்மத்தின் தொடர்ச்சியாக மலேசிய இலக்கியத்திற்கு பலம் சேர்க்கின்றன. – பவித்திரா
-
உலகின் நாக்கு
பல கட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தரராமசாமி எனத் தொடர்ந்து வரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளைக் கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது.
உயிர்ப்புள்ள ஓர் இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் எனக் கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றித் தான் என உணரும் தானறியாத் தன்னிலை ஒன்றைப் புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்ட பின் தான் கண்டவற்றைத் தன் மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது.–ஜெயமோகன் முன்னுரையிலிருந்து..
-
-
-
-
-
கருங்காணு
மலேசியத் தமிழர்களின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை, எதிர்கொண்ட சிக்கல்களை குறுநாவல் வழி செறிவாக எழுதியுள்ளார் அ.ரெங்கசாமி
-
காட்டுப் பெருமாள்
இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வாய்மொழி வரலாறு பெருமாளைப் பற்றிய ஒரு கண்ணோட்டமாகும். கம்யூனிச சித்தாந்த போராட்டவாதியான இவர், சுங்கை சிப்புட் தோட்டப்புறங்களில் மட்டுமல்லாமல், பொதுவாகவே தொழிலாளர் வர்கத்தின் தலை சிறந்த போராட்டவாதியாக திகழ்ந்தார்.
-
குறையொன்றுமில்லை
“இதற்கு முந்தைய தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பும் பயனீட்டாளர் குரல் ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளைத் தாங்கியே மலர்ந்துள்ளது. ஆனால், இத்தொகுப்பு ஒரு விதத்தில் முந்தையதிலிருந்து வேறுபடுகிறது. முந்தைய தொகுப்புகளில் இருந்த சிந்தனைத் துளிகளில் சாமியின் கை நம் தலைக்கு மேலே ஆசி கூறும் பாவத்தில் இருந்தது. இந்தத் தொகுப்பில் அவர் கையை நம் தோள்களின் மேல் ஆதரவோடு வைத்துள்ளார்.
-
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் இது.
-
கையறு
நான் இந்த நாவலை முதலில் வாசித்தபோது என்னைக் கவர்ந்த அம்சமே நினைவுச்சின்னம், இமயத்தியாகம், மரவள்ளிக்கிழங்கு என இதற்கு முன் இக்களத்தை ஒட்டி புனையப்பட்ட நாவல்களில் இல்லாத தனித்த வழித்தடத்தை இப்புனைவின் வழி கோ.புண்ணியவான் அமைத்துள்ளார் என்பதுதான். எழுத்தாளனின் கைரேகை என்பது அதுதான். அதுவே ஒரு புனைவை மறுவாசிப்புக்குத் தூண்டுகிறது. ஓர் அசாதாரண சூழலில், தானறியா நிலத்தில், கதாசிரியன் உருட்டிவிடும் கதாபாத்திரங்கள் மூலம் அவனே கண்டடையும் வாழ்க்கையில் திடுக்கிடும் உண்மைகளை கோ.புண்ணியவான் இந்த நாவலின் வழி அடைந்துள்ளார்.‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார். – ம.நவீன்
-
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980-இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.1987- டிசம்பரில் இலக்கிய சுதந்திரம் தேடி சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரிசில் குடியேறினார். இத்தொகுப்பில் உள்ள ஆறு கதைகளும் அவரே தெரிவு செய்தவை. அவரது பார்வையில் இந்த ஆறு கதைகளும் அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். 2000-ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
-