-
வரலாறு என்னும் கதை
வாலாறு எனும் கதை, எடுவர்டோ அவர்களின் படைப்பு. ரவிக்குமார் அவர்களால் தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.
“நான் உங்களது படைப்பை வாசிக்கும்போது நான் இன்ந்தென வகைப்படுத்தமுடியாத எனது இயலாமையைக் கண்டுகொள்கிறேன். இது வரலாறு? அப்படியானால் வரலாறு நூல்களின் மிகச்சிறந்த வடிவம் இதுவென்பேன். முழுக்க முழுக்க வதந்திகள், முழுக்க முழுக்க கதைகள்.
– சேண்ராஸ் சிஸ்ரோஸ்
-
ஒற்றறிதல்
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.
-
புதுமைதாசன் கதைகள் (தொகுப்பு)
மாந்தர்தம் பல்வேறு குணவியல்புகளை அகழ்ந்து சித்தரிக்கும் அருந்தொகுப்பு
-
விழிப்பு (புதுமைதாசன்)
திகில்! மர்மம்!
பிரவிதோறும் விபத்து!
மரண ஒரே இடத்தில்!
என்ன மாயம்! என்ன மர்மம்! -
தாரா
தாரா எழுத்தாளர் ம.நவீனின் மூன்றாவது நாவல். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து மர ஆலையில் வேலை செய்ய வரும் நேபாளிகளுக்கும் அங்கு வசிக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் கலவரமும் அதனால் உண்டாகும் அமைதியற்ற நிலையும் நாவலின் அடிப்படை கதையோட்டம். அதன் ஆழத்தில் இரு சிறுமிகள் தங்கள் இனக்குழுவின் ஆன்ம தூய்மையை மீட்டெடுக்கும் வேறொரு கதையும் புதைந்துள்ளது.
RM34.00 -
ஆழம்
இந்நாவலின் வழி வாசகர்களுக்குள் மலையக காட்டு மக்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களை அலைக்கழிக்கும் அதிகார ஜாதீய பின்னணியும் கடத்தப்படுகிறது.
-
அ. முத்துலிங்கம்-சிறுகதைகள்(2-பாகங்கள்)
ஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு :
1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்
நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.
-
ஸலாம் அலைக் (நாவல்)
ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
ஆசிரியர் குறிப்பு:இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.
இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்….. -
வாழ்க்கை ஒரு விசாரணை
பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர். மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை- பொதுவாக வாழ்க்கையை- நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சிமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.
பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்ப்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்பிகிறேன்.
– வல்லிக்கண்ணன்
-
பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)
பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.
-
முகமூடிகளின் பள்ளத்தாக்கு
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.” -ஆஷிஷ் நந்தி.
-
சமகால சிறுகதைகளின் பரிணாமம்
என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
-
-
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் அலையும் கடலும்
கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை.
-
-
-
-
கடல்புரத்தில்..
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.
-
வெயிலின் கூட்டாளிகள் & பிற கதைகள்
வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க முடியாதவை. அலைகளைப் போல முடிவற்று நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில், முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதி செய்ய முயல்கின்றன இக்கதைகள்.
-
ஆள்தலும் அளத்தலும்
ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது. பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு. சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!