-
-
-
எறும்பு அரண்மனை
அம்முக்குட்டி எறும்பு அரண்மனையில் நடத்திய சாகசப் பிரயாணம் நீங்களும் கூட்டத்தில் பேசிக்களிக்கலாம்.
-
ஆகாய யுத்தம்
சிறுவர்களுக்கான சிறந்த மொழிப்பெயர்புக் கதைகள். குறைந்த விலையில் வண்ண பக்கங்களுடன்.
-
ரயிலும் குதிரையும்
அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?
-
என்னுடைய நண்பர்கள்
குழந்தைகளுக்கான அவர்களது உலகை விரிவுப்படுத்தக்கூடிய கதை இது. முழுக்க வண்ணப் படங்கள் கொண்ட புத்தகம்
-
ஓணான் கற்ற பாடம்
வௌவாலைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட ஓணானின் கதையை வாசித்துப் பாருங்களேன். நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வாசிக்க சிறந்த நூல்.
-
தேன் எடுக்கப் போன குட்டித் தேனீ
முதல் முறயாகத் தேன் எடுக்கப்போன குட்டித் தெனீயின் அனுபவங்கள் என்ன?என்ன? தெரிந்து கொல்லுங்களே.
-
-
எறும்பும் புறாவும்
தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். புத்தகம் முழுதும் ரஷ்ய ஓவியர் ரமாதினின் சித்திரங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. தவறவிடாதீர்கள்! குழந்தைகளின் கைகளில் தவழ விடுங்கள்!!
-
அணில் தோப்பு
அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?
-
பென்சில்களின் அட்டகாசம்
மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.
-
பிஸ்கெட் பட்டாம்பூச்சி
காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!
-
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதிலும் அந்தப் பாதிப்பின் செல்வாக்கு ஆக்கிரமிக்கிறது. உலகத்தின் மீதான அச்சமும் சந்தேகமும் நிறைந்த ஒரு முரண் பார்வையை உண்டாக்கும் சக்தி வாய்ந்தது அந்தப் பாலபருவத்து மன முள். பிள்ளைகள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படும் இந்த மானுடப் பேரவலத்தின்மீது, இந்த உலகளாவிய தீவிர சமூகப் பிரச்சினையின்மீது, ஆழ்ந்த முறையில் கருத்துச் செலுத்துகிறது இந்த நூல்; இந்த இழிவுக்கெதிரான விழிப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறது. எதிர்காலத் தலைமுறை, எதிர்காலச் சமூகத்தின் கூட்டு ஆன்மா நோயடையாதிருக்க, இந்த நூல் இப்போது ஒரு மூலிகையாகத் தோன்றியிருக்கிறது.
-
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
-
வரதனும் மறைந்த மடிக்கணினியும்
வரதனும் இயந்திர நண்பனும் என்னும் கதைத் தொடரின் இரண்டாவது பாகமாக அமைந்த வரதனும் மறைந்த கணினியும் என்னும் கதை இளையர்களை கவரும் ஒரு படைப்பு.
-