Showing 1–20 of 337 results

  • 100 சிறந்த சிறுகதைகள் (2 பாகங்கள்)

    ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு – எஸ்.ராமகிருஷ்ணன்

    RM110.00
  • 1001 அரேபிய இரவுகள் (ஒன்றாம் இரண்டாம் தொகுதி)

    (One Thousand and One Nights) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். தமிழில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

    RM111.60
  • 18வது அட்சக்கோடு

    ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் பார்த்ததில்லை.
    RM27.50
  • 1984 (ஜார்ஜ் ஆர்வெல்)

    ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார் ஜார்ஜ்.

    RM19.90
  • 21ஆம் நூற்றூண்டுச் சிறுகதைகள்

    2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறுவேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. சமகால தமிழ்க் கதைகளின் நோக்கும் போக்கும் இத்தொகுப்பின் வழியே புலப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நவீன புனைவெழுத்தில் இடையறாது இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா இதைத் தொகுத்துள்ளார்.

    RM23.00
  • CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

    எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. அவற்றை எழுதிக்கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது, அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா? போலவே அரேபிய பாலைவளங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்!? இப்போது. நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா அல்லது நான் “வேரோடி’ எனது கரையை போய்ச்சேர்ந்து விட வேண்டுமா? கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகயே நியங்களான எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்! அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.

    RM17.50
  • Towards A Third Cinema

    The on-screen offerings of Hollywood and Europe have colored the popular perspective of cinema- What it is and what it should be- to such a great extent that the filimic contributions of Latin American directors remain largely uncharted. This book , with its compelling insights, intends to put the stylistically groundbreaking, exceedingly true to life and aesthetically mesmerizing Latin American cinema on the map and establish it as the “Third Cinema”.
    By the same Author

    RM20.00
  • அ. முத்துலிங்கம்-சிறுகதைகள்(2-பாகங்கள்)

    ஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு :

    1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்

    நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.

    RM180.00
  • அஞ்சலை

    இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.

    RM35.00
  • அஞ்சல் நிலையம்

    அஞ்சல் நிலையம்

    ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன.

    RM30.00
  • அஞ்ஞாடி

    சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

    ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…

    RM120.00
  • அந்தோன் செகாவ்: சிறுகதைகளும் குறுநாவல்களும்

    மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டு விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக் கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டுத் துறந்து விடுவார்களே.

    RM30.00
  • அந்நியன்

    இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

    ‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

    RM21.00
  • அபி கவிதைகள்

    அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே.

    – ஜெயமோகன்.

    அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் – இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.

    – தேவதேவன்.

    RM22.00
  • அபிப்பிராய சிந்தாமணி

    இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது

    RM90.00
  • அப்பாவின் வேஷ்டி

    எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்

    RM17.00
  • அமீலா

    இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி “அமீலா”. சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து ‘கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது’ – என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ‘ஆழ்மனதில் அலைக்கழியுங்கள். மேல் முடியை கலைத்துவிடுங்கள்’ – என்று கதையெழுதியவர்களுக்கு விபூதி அடிக்கிறார்கள். கதைகள் பரிசோதனைக்குழாய் தவளைகள் போல விழிபிதுங்கிவிடுகின்றன. ஆனால் “அமீலா” காட்டுத்தீயினால் எழுந்தோடிய கங்காருக்கூட்டத்தைப்போல என்னுள் விழுந்து சிறு சிறு பொறிகள் ஏற்படுத்திய எழுத்தின் இயற்கையான இடப்பெயர்வுகள். அவைதான் இந்தத்தொகுப்பில் கதைகளாக வெளிவந்திருக்கின்றன.

    RM13.00