-
கம்பா நதி
‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ஓடியதோ ஓடவில்லையோ, இப்போது அதற்கான குட்டி மைய மண்டபம் மட்டும் இருக்கிறது. மண்டபத்தின் கீழே ‘கசங் கணக்காகத் தண்ணீர்’ கிடக்கிறது. இதுதான் நாவலின் பரிமாணமாக விரிகிறது. இந்நாவலுக்குள் ஏராளமான மனுஷர்களும் மனுஷிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். நதியின் அலைவீச்சு தன்னுள் மிதக்கும் பலவற்றையும் கரையோரத்தில் ஒதுக்குவதைப்போல இவர்களும் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் நதியில் மிதந்து வந்ததற்கான பலாபலன்களை நம் மனத்துக்குள் நுழைத்துவிடுவதில் இந்த எழுத்து புரியும் மாயம் அற்புதமானது. சாதாரண மனிதர்களின் இருப்பையும் அவர்களின் தேடலையும் ஆசை அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் தோல்விகளையும் வரலாற்றில் நிறுத்திவிட முடியுமென இந்த நாவல் நம்முன்னே கல்லெழுத்தாகப் பதிய வைக்கிறது. நம் சமூகத்தின் பெண்ணினம் இந்த நவீன யுகத்திலும் எதிர்கொள்கிற காவியச் சோகம் நாவலினூடே வெளிப்பட்டு நம்மை உலுக்குகிறது.
Out of stock
-
கடல்புரத்தில்
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.
Out of stock
-
வண்ணநிலவன் சிறுகதைகள்
1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. எமிலி ஜோலா எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். ‘வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது.
Out of stock
-
ஆ.மாதவன் கதைகள்
ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்…
அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேசி போல தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை
Out of stock
-
கோபிகிருஷ்ணன் படைப்புகள்
கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.
Out of stock
-
விஷக் கிணறு
அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் தேர்வு செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்குக் காரணமான சிக்கலைக் காட்டிலும் பூதாகரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்கக்கூடுமா? எத்தனைக் கேள்விகள்?
விஷக்கிணறு அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.
Out of stock
-
இசூமியின் நறுமணம்
இசூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.
Out of stock
-
கதை சொல்லியின் 1001 இரவுகள்
ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.
Out of stock
-
அம்புப் படுக்கை
பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமென கதறவில்லை துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி இயன்றவரை ஒத்திப் போடுவதாக வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது இக்கதை மாந்தர்களைப் போல.
Out of stock
-
ட்ரங்கு பெட்டிக் கதைகள்
பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சிந்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவன், ஓவியங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சிலது மறுவுருப்பெற்று இருக்கின்றன.
Out of stock
-
நீலகண்டம்
நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.
Out of stock
-
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
(தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு
பக்கங்கள் 1344
புதிய அம்சங்கள்
திருநர் வழக்குச் சொற்கள்
தொடர்புச் சொற்கள்
பெரிய அளவில் (18.5 செ.மீ. – 24 செ.மீ.)
23800 தலைச்சொற்கள்
2632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள்
40130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள்
311 படங்கள்
Out of stock
-
நன்மாறன் கோட்டைக் கதை
பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள்
பலவும் மிகச் சாதாμணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட
முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை
இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம்
சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல்
என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித
முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே
ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை
என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக
எடுத்துச்சொல்கிறார்.Out of stock
-
செல்லாத பணம்
“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும்
தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது.
அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான
மனித அனுபவத்தின் முழுமை…
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே
நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின்
முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக்
கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின்
முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை
தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக்
கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின்
முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான்
‘செல்லாத பணத்’தின் சிறப்பு.Out of stock
-
மண்பாரம்
இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்… ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.
இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.
Out of stock
-
கொலைச் சேவல்
‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.
Out of stock
-
சாவுசோறு
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்…
Out of stock
-
எங் கதெ
இமையத்தின் இந்த நெடுங்கதையில்
ஆண்-பெண் உறவின் ஒரு
பரிமாணம் முழு ஆவேசத்துடன்
பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது.இமையத்தின் படைப்புகள்
அனைத்திலிருந்தும் வேறுபட்ட
களம்; வேறுபட்ட நடை.Out of stock
-
செடல்
மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன? ஒரு ஐதீகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற—அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற—ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.
Out of stock
-
வாழ்க வாழ்க
அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் குறுநாவல்.
Out of stock